புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவல் தொடங்கி கிட்டதட்ட இரு வருடங்கள் ஆகி விட்ட நிலையில், தினம் தினம் ஒரு புதிய திரிபு குறித்த செய்தி வெளியாகி நம்மை பீதியில் ஆழ்த்துகிறது. மேலும் குளிர்காலத்தில், கால நிலை காரணமாக, பொதுவான சளி காய்ச்சல் பாதிப்பும் அதிகமாக இருக்கும் என்பதால், நாம் சரியான உணவு, பானங்களை எடுத்துக் கொள்லும் பழக்கம் இருந்தால், முற்றிலும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
ஆரோக்கியமாக இருக்கவும், குறிப்பாக, இந்த கொரோனா காலத்தில். தொற்று நோயிலிருந்து தப்பவும், வெந்நீரைக் குடிப்பது மிகச் சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதுவும் லேசான வெதுவெதுப்பாகக் குடித்தால், அதன் நன்மைகள் பன்மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் குளிர்ந்த நீருக்கு பதிலாக வெதுவெதுப்பான நீரை குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இரவில் தூங்கும் முன் 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம், கொரோனா போன்ற தொற்று நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதோடு, பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். எனவே இரவு தூங்கும் முன் வெந்நீரை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
உடலில் நீர் சத்து குறையாமல் இருக்கும்
குளிர்ந்த நீரைக் குடிப்பதற்குப் பதிலாக, அனைவரும் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டு, இரவில் தூங்கும் முன் 1 கிளாஸ் சூடாக குடித்து வந்தால், உடலில் நீர்சத்து குறையாமல் பராமரித்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது நமது உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்தை வழங்கவும் உதவுகிறது.
ALSO READ | Turmeric: 'இந்த’ பிரச்சனை இருக்கிறவங்க ‘மஞ்சளுக்கு’ NO சொல்லுங்க...!!
மனநிலையை மேம்படுத்த உதவும்
உங்கள் மனநிலை சரியில்லாமல் இருந்தால், வெந்நீர் மிகுந்த பலன் தரும். இதன் மூலம் உங்கள் மனநிலை சீராகும் (Mental Health) என்று நம்பப்படுகிறது. தண்ணீர் சத்து பற்றாக்குறையால், உங்கள் மனநிலை எதிர்மறையாக மாறும் என்று கூறப்படுகிறது. அதனால்தான் அதிகமாக குடிக்க வேண்டும். இது மனதை அமைதிப்படுத்தவும் நேர்மறையாகவும் இருக்கவும் உதவுகிறது.
வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமான அமைப்புக்கு முக்கியமானது
இது தவிர, வெந்நீர் அருந்துவதால், வளர்சிதை மாற்றமும் மேம்படும். சூடான நீர் உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. எடை இழப்பையும் துரிதப்படுத்துகிறது. இது தவிர, வெந்நீர் குடிப்பது செரிமான அமைப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது. செரிமானத்துடன், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், தசைகளை தளர்த்தவும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR