கொரோனா உலகில் பேரழிவை ஏற்படுத்தி பயமுறுத்தி வருகிறது. அதுவெ இன்னும் ஒய்ந்த பாடவில்லை. ஆனால் இப்போது புதிய நோய்கள் மேலும் பரவி உலகம் முழுவதிலும் அதிர்ச்சி அளிக்க தொடங்கியுள்ளன. பொலிவியாவில் ஏற்பட்ட மர்ம காய்ச்சலுக்குப் பிறகு, இப்பொழுது ஆப்பிரிக்க நாடான செனகலின் தலைநகரான டைகரில் மர்மமான கடல் நோய் பரவியுள்ளது.
கடலில் மீன்களை பிடிக்க போகும் மீனவர்களிடையே தொடர்ந்து மர்ம நோய் பரவி வரும் நிலையில், அப்பகுதியில் பீதி ஏற்பட்டு வருகிறது.
A severe contagious disease broke out in Senegal, spread among fishermen who in turn, infected their families and those they came in contact with. The public is urged to stay away from the sea and beach until a solution is reached. Speedy recovery folks @PaSulaymangaye @Mustapha5 pic.twitter.com/rf4WTDAbAh
— ML Fatty (@MLFatty4) November 21, 2020
சில நாட்களுக்கு முன்பு, இந்த புதிய நோயின் அறிகுறிகள் ஒரு இளம் மீனவரிடம் காணப்பட்டன, அதன் பிறகு, அது நூற்றுக்கணக்கான மீனவர்களுக்கு பரவியது. இந்த மர்மமான நோய் குறித்து உறுதியான செய்தி எதுவும் இல்லை என்று செனகலின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் அறிகுறிகள் முற்றிலும் வேறுபட்டவையான உள்ளன என்றும், நோய் மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
செனகல் மீனவர்கள் சருமத்துடன் தொடர்புடைய இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை. சருமத்தில் கடுமையான அரிப்பு ஏற்பட்ட பிறகு அந்த பகுதியில் கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி வலி ஏற்படுகிறது. ஆனால் மிகவும் பயமுறுத்தும் விஷயம். அது மிக வேகமாக பரவுகிறது.
ALSO READ | தண்ணீரில் கண்டம் என கணித்த டாக்டர்கள்.... தவிக்கும் இளம் பெண்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR