Actor R Madhavan Weight Loss Tips : தமிழ் மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கிய மாதவனுக்கு தற்போது 54 வயதாகிறது. இவர், உடல் எடையை குறைக்க என்னென்ன செய்தார் தெரியுமா? இங்கு பார்ப்போம்.
கோலிவுட் திரையுலகில் ‘சாக்லேட் பாயாக ‘ அறியப்பட்டவர் மாதவன். இளமை காலத்தில் பல பெண்களின் மனங்களை கொள்ளைகொண்ட இவர், தனது 50களிலும் அசால்டாகவும் அழகான ஆண்மகனாகவும் வலம் வருகிறார். இவர், உடல் எடையை குறைக்க சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
வெயிட் லாஸ்:
வெயிட் லாஸ் செய்வதற்கு, உடற்பயிற்சி செய்வது மட்டுமன்றி டயட், சுய ஒழுக்கம் என பல்வேறு விஷயங்கள் இருப்பதும் அவசியமாகும். என்ன சாப்படுகிறோம் என்பதை கணக்கெடுத்து, சரிபார்த்துக்கொள்ள வேண்டும். சரியாக தண்ணீர் குடித்து, உடலை நிரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க மாதவன் செய்யும் விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
இன்டர்மிட்டண்ட் விரதம்:
இன்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் இருந்தது, மாதவனின் உடல் எடை இழப்பிற்கு காரணமாக இருக்கிறது. மாதவன், தினமும் தனது டின்னரை, மாலை 6:45 மணிக்கே முடித்து விடுவாராம். அதன் பிறகு மறு நாள் அதே வேளைக்குதான் அடுத்த உணவை எடுத்துக்கொள்வாராம். இந்த இன்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங்கால், நமது உடல் கெடோசிஸ் எனும் நிலைக்கு செல்கிறது. இது, கொழுப்பு எரிவதற்கும் உடலுக்கு ஆற்றல் கொடுக்கவும் உதவுகிறது. இது குறித்து வெளியான மருத்துவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், மாதவன் இதை ஃபாலோ செய்கிறாராம்.
சாப்பிடும் போது மாதவன் செய்வது:
மாதவன், தினமும் சாப்பிடுகையில் தனது உணவில் முழு மனதையும் வைத்து சாப்பிடுவாராம். அப்படி சாப்பிடும் போது, ஒரு வாய்க்கு 40-60 முறை மென்று சாப்பிடுவாராம். இப்படி சாப்பிடுவதனால், அவர்களின் உணவு நன்றாக மெல்லப்பட்டு அது சீக்கிரமாகவே செரிமானத்திற்கு உள்ளாகும். சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதாலும் உணவு சீக்கிரமாகவே செரிமானம் ஆகும். இது, உடல் எடை குறையவும் உதவும். அது மட்டுமன்றி, உடல் மெட்டபாலிசத்தின் அளவு அதிகரித்து ஆற்றலும் பெருகும்.
மாதவன், உறங்க செல்வதற்கு 90 நிமிடங்களுக்கு முன்னர் சாப்பிட்டு விடுவாராம். அதே போல படுக்க போவதற்கு முன்னர் 2 மணி நேரம் முன்னர் செல்போன் உபயோகிப்பதையும் நிறுத்தி விடுவாராம்.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க சினேகா செய்யும் விஷயம்! அட, அசத்தலா இருக்கே..
பானங்கள் எடுத்துக்கொள்ளுதல்:
மாதவன், தனது உடல் எடை குறைப்பு ஜர்னி குறித்து பதிவிடுகையில், தினமும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க நன்றாக தண்ணீர் குடிப்பதாகவும், தண்ணீர் மட்டுமன்றி கிரீன் காய்கறிகளின் ஜூஸ்கள் மற்றும் பழச்சாறுகளையும் குடிப்பாராம். இதனால், உடலில் மெட்டபாலிக் செயல்பாடும் அதிகரிக்கும். தினமும் தண்ணீர் குடிப்பது, நம் உடலில் பெட்டபாலிசத்தை அதிகரித்து, பசி உணர்வை குறைக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இதனால், நாம் அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கலாம்.
சரியான தூக்கம்:
உடல் எடையை குறைப்பதற்கு தினமும் சரியான அளவு தூங்குவது மிகவும் முக்கியமாகும். இதனால், மாதவன் தினமும் தனக்கான உறக்க சைக்கிளை சரியாக அமைத்துக்கொண்டார். தினமும் தனது போனை பெட்டில் இருந்து தள்ளி வைத்துவிட்டு, தனக்கு தேவையான அளவு தூங்கினாராம். நாம் இரவில் அதிக நேரம் விழித்திருந்தால், பசியை தூண்டும் ஹார்மோன்கள் அதிகரித்து, அது அதிகமாக உணவு சாப்பிடுவதற்கு வழிவகுக்கும். இதனால் உடல் கொழுப்பும் அதிகரிக்கும். எனவே, உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் நபர் தினமும் 7-8 மணி நேரம் தூங்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ