பிரபல தென்னிந்திய நடிகை அமலா பால் சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமாகி, மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
பின்னர் இயக்குனர் ஏஎல் விஜயை காதல் திருமணம் செய்து கொண்ட அமலாபால், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விவாகரத்து பெற்றார்.
தற்போது தனியாக வசித்து வரும் அவர் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அமலா பால் நடிப்பில் வெளியான திருட்டு பயலே படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
இந்நிலையில், அமலா பால் குளிர்காலத்தில் அருந்தும் "பானம்" பற்றி தனது ரசிகர்களுக்கு டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.
அவர் கூறும்போது எப்போதும் நான் வழக்கமான குளிர்காலம் என்றாலே கேரட், இஞ்சர், எலுமிச்சை, தக்காளி, கீரை, பீட்ரூட் நிறைத்த (vegeatable) காய்கறி ஜூஸ் குடிப்பது வழக்கம் என்றார்.
என்னென்றால் அது குளிர்காலத்தில் உடம்பில் ஏற்படம் சூட்டினை தடுக்கும், மேலும் உடல் ஆரோக்கியம் பெரும். காலை வேளையில் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.
அத்தகைய ஜூஸில் பழங்களானாலும் சரி, காய்கறிகளானாலும் சரி, இரண்டிலுமே நிறைய புரோட்டீன்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
அதனால் தான், குளிர்காலத்தில் தினமும் ஒரு டம்ளர் பழம் அல்லது காய்கறி ஜூஸை குடிப்பேன் என்றார். அப்படியே என்னுடைய டயட்டை நான் மேற்கொண்டு வருகிறேன் என்றார்.
Best routine ever#Run followed by winter's favourite #vegetablejuice
Amla(gooseberry ;-)), Carrot, Ginger, Lemon, Tomato, Spinach, Beetroot #healthylifestyle #immunebooster #glow #discipline pic.twitter.com/AgE1RE8egi— Amala Paul (@Amala_ams) February 19, 2018