Weight Loss Tips: நம் முன்னோர்கள் நம்மை விட ஆரோக்கியமாக இருந்தார்கள். அவர்களை முதுமையில் தாக்கிய பல நோய்கள் நம்மை இந்த காலத்தில் சிறு வயதிலேயே தாக்குகின்றன. இதற்கு முக்கிய காரணம் நமது உணவு முறையும் வாழ்க்கை முறையும்தான். குறிப்பாக இந்த காலத்தில் அலுவலக பணிகள், தொழில், படிப்பு என பல காரணங்களால் மக்களால் உணவில் கவனம் செலுத்துவதில்லை. இது அவர்களின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் முன் மணிக்கணக்கில் அமர்ந்து பணி புரிகிறோம். அமர்ந்துகொண்டே பல மணி நேரம் பணிபுரிவதால் நமது உடலில் போதுமான செயல்பாடு இருப்பதில்லை. மேலும், அவ்வப்போது உட்கொள்ளப்படும் நொறுக்குத் தீனிகளும் துரித உணவுகளும் உடல் எடை அதிகரிக்க காரணமாகின்றன.
இது தவிர மரபணு, ஹார்மோன் பிரச்சனைகள், தவறான உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை ஆகியவையும் உடல் பருமன் அதிகரிக்க காரணமாக இருக்கலாம். இந்த பிரச்சனையை தவிர்க்க, மருத்துவர்கள் மற்றும் உணவு நிபுணர்கள் பல ஆலோசனைகளை வழங்குகின்றனர். இயற்கையான வழியில் உடல் எடையை குறைக்க முயற்சிக்க வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது. நமது தினசரி உணவில் அதிக பழங்களை சேர்த்துக்கொண்டால், உடல் பருமன் மற்றும் அது தொடர்பான பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம் என சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
உடல் எடையை குறைக்கும் பழங்கள் (Fruits For Weight Loss)
பழங்களில் கொழுப்பின் அளவு மிக குறைவாக உள்ளது. மேலும், இதில் அதிக அளவு நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளது. இது கலோரிகளை குறைக்கிறது. பழங்களை உட்கொண்ட பிறகு நமது பசி தணிகிறது. பழங்களில் இருக்கும் நார்ச்சத்து உடலின் செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும். பழங்களை உட்கொள்வதன் மூலம் நாம் அவ்வப்போது தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இது தொப்பை கொழுப்பை குறைக்கவும் (Belly Fat) உடல் எடையை குறைக்கவும் (Weight Loss) மிகவும் உதவும்.
பழங்களிலிருந்து நமது உடலுக்கு நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கின்றன. இதனால் உடல் பருமன் குறைகிறது. ப்ரோந்தோசயனிடின்கள், ரெஸ்வெராட்ரோல், காஃபிக் அமிலம் மற்றும் கேட்டசின்கள் போன்ற பைட்டோ கெமிக்கல்கள் பழங்களில் அதிகம் காணப்படுகின்றன. இவை ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கொழுப்பு செல்கள் உருவாவதையும் சேமிப்பதையும் தடுக்கும். பழங்களில் காணப்படும் நார்ச்சத்து குடல் மைக்ரோபயோட்டாவிற்கு (குடலில் காணப்படும் ஆரோக்கியமான நுண்ணுயிரிகளுக்கு) நன்மை பயக்கும்.
உடல் எடையை குறைக்க உதவும் சில பழங்கள் பற்றி இங்கே காணலாம்
பப்பாளி
பப்பாளியில் (Papaya) வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளன. இது தவிர, இதில் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், புரதம், கால்சியம் மற்றும் பிற வைட்டமின்களும் காணப்படுகின்றன. பப்பாளியை வெறும் வயிற்றில் உட்கொண்டால், அது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது மட்டுமின்றி சரும பிரச்சனைகளை நீக்கவும் உதவுகிறது.
பேரிக்காய்
பேரிக்காயில் (Pears) அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதனால் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் வயிற்றில் நிரம்பிய உணர்வு இருக்கும். பேரிக்காய் சாப்பிட்ட பிறகு, அவ்வப்போது ஏற்படும் பசி தடுக்கப்படுகின்றது. இது எடையைக் குறைக்க உதவுகிறது.
மேலும் படிக்க | ஆண்களே இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ யூரிக் அமிலம் ஓவரா இருக்குனு அர்த்தம்
வாழைப்பழம்
வாழைப்பழம் (Banana) செரிமானத்தை சீராக்க உதவுகிறது. இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செரிமானம் மேம்படும். இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால், இதை உட்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை வராது. இது மட்டுமின்றி வாழைப்பழத்தை உட்கொள்வது உடலில் ஏற்படும் சோர்வைக் குறைக்கிறது. செரிமானத்தை சீராக்குவதால் இதை உட்கொள்வது உடல் பருமனை வேகமாக குறைக்கலாம்.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி (Strawberry) பழத்தை உட்கொள்வதன் மூலம் கலோரிகளை வேகமாகவும் கணிசமாகவும் குறைக்கலாம். இதை அப்படியே சாப்பிடலாம், அல்லது ஸ்மூத்தி மற்றும் சாலட் வடிவிலும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
திராட்சை
வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் திராட்சையில் (Grapes) அதிக அளவில் உள்ளன. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மேலும் இது செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. திராட்சை அவ்வப்போது ஏற்படும் பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக இதை உட்கொள்வதால் எடை விரைவாகக் குறைக்கிறது. திராட்சை இதயம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்வதிலும் நன்மை பயக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ