Cholesterol Control Tips: இன்றைய நவீன உலகில் நீரிழிவு நோய், உயர் கொலஸ்ட்ரால், யூரிக் அமிலம், உடல் பருமன் என பல வாழ்க்கை முறை நோய்கள் மக்களை ஆட்டிப்படைக்கின்றன. ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை இவற்றுக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் பிரச்சனை பலரிடம் காணப்படுகின்றது.
கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு அவசியம்தான். ஆனால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல ஆபத்துகளை நாம் எதிர்கொள்ள வேண்டி வரலாம். இது இதய ஆரோக்கியத்தை மோசமாக்குவது மட்டுமல்லாமல், உடலை பல நோய்களுக்கு ஆளாக்கும். கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்த வேண்டும். பல இயற்கையான வழிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம். இவற்றால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம்.
எலுமிச்சை (Lemon):
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. தினமும் இரண்டு அல்லது மூன்று எலுமிச்சை பழங்களின் சாறை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும். இது எடை இழப்பில் உதவுவதோடு இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.
அக்ரூட் பருப்புகள் (Walnuts):
அக்ரூட் பருப்புகள், குறைந்த அடர்த்தி கொண்ட கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இரண்டு ஆண்டுகள் தினமும் அக்ரூட் பருப்புகளை உட்கொண்டவர்களின் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைவாக இருந்ததாக அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் இதழில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | வைட்டமின் டி குறைபாட்டை போக்க உதவும் மேஜிக் மூலிகைகள்: இப்படி சாப்பிடுங்க
பெர்ரி (Berry):
அவுரிநெல்லி, ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் பிற பெர்ரி வகைகளில் ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. இவை இரத்த அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. கெட்ட கொழுப்பை குறைக்க இவை உதவுவதோடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
நெல்லிக்காய் (Amla):
நெல்லிக்காய் அதிக அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் அதாவது நல்ல கொழுப்பின் அளவை பாதிக்காமல் ட்ரைகிளிசரைடுகள் எனப்படும் கொழுப்பு அமிலங்கள் உட்பட கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. . மக்கள் பொதுவாக அதிக கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த நெல்லிக்காயை பயன்படுத்துகின்றனர். நெல்லிக்காயில் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
பூண்டு (Garlic):
தினமும் ஒன்று அல்லது இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவு 10% குறையும். கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்த விரும்பும் நபர்கள் தினமும் இரண்டு பூண்டு பற்களை சாப்பிடலாம். இதை பல்வேறு உணவு வகைகளில் சேர்க்கலாம். பூண்டில் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
கெட்ட கொலஸ்ட்ரால் காரணமாக இந்த நோய்கள் வரக்கூடும்
கெட்ட கொலஸ்ட்ரால் இன்னும் பல நோய்களுக்கும் காரணம் ஆகின்றது. இது மாரடைப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, எல்டிஎல் அதிகமாக இருந்தால், இரத்த நாளங்களில் அடைப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூளை பக்கவாதம் ஆகியவை ஏற்படும் அபாயமும் பன்மடங்கு அதிகரிக்கிறது. ஆகையால் அவ்வப்போது கொலஸ்ட்ரால் அளவை பரிசொதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகின்றது. மேலும், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் அல்லது சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொலஸ்ட்ரால் அளவை பொறுத்த வரை அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சுகர் லெவலை சுபலமா குறைக்க... இந்த இலைகளை மென்று சாப்பிடுங்க போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ