வயதானாலும் நமது மூளை தொடர்ந்து சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தால், டிமென்ஷியா போன்ற கடுமையான மன நோய்களின் அபாயத்தை பெருமளவு குறைக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வயது ஏற ஏற உடல் பலவீனமடைவதைப் போல் மூளையும் பலவீனமடைகிறது. நமது மூளை சுறுசுறுப்பாக இருக்கும் போது, அது புதிய தகவல்களை தன்னுள் கிரகித்து கொண்டு ஆற்றலுடன் செயல்புரிகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உடல் ஆரோக்கியத்திற்கு உடலுக்கு உடற்பயிற்சி தேவை என்பது போல், மனதை பிஸியாக வைத்திருப்பது மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது.
டிமென்ஷியா என்பது மூளையின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் நரம்பு செல்களில் ஏற்படும் சேதத்தால் உண்டாகும் ஒரு நோய். மறதி நோய் என அழைக்கப்படும் இது நினைவாற்றல், சிந்தனைத்திறன் மட்டுமல்ல, அன்றாட செயல்களை கூட செய்ய முடியாத அளவிற்கு மூளைத் திறனை பாதிக்கும். வயதானவர்களில் டிமென்சியா நோய் மிகவும் பொதுவான பிரச்சனை. டிமென்சியாவின் மிகவும் பொதுவான வகை அல்சைமர் நோயாகும்.
வாழ்நாள் முழுவதும் மூளைக்கு தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டே இருப்பவர்கள் டிமென்ஷியா அல்லது அல்சைமர் நோயினால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம் (Alzheimer’s Prevention Tips) என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருப்பது மூளையின் கட்டமைப்பையும் செயல்பாட்டையும் பலப்படுத்துகிறது.
மேலும் படிக்க | தக்காளி சூப்பர்புட் தான்... ஆனால் இந்த பிரச்சனை இருக்கிறவங்க தவிர்ப்பது நல்லது
உங்கள் மூளையை பிஸியாக வைத்திருக்க எளிய வழிகள்
புதிதான விஷயங்கள் ஏதேனும் கற்றுக்கொள்ளுங்கள்: புதிய மொழி அல்லது இசைக்கருவியைக் கற்றுக்கொள்வது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
அல்சைமர் நோய் ஏற்படாமல் தடுக்க, மூளையை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க மூளைப் பயிற்சிகளை வாரத்திற்கு 5 நாட்களாவது செய்ய வேண்டும். புதிர் விளையாட்டு விளையாடுதல் போன்ற பயிற்சிகள் உதவும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இந்த மாற்றங்கள் அனைத்தும் அல்சைமர் அபாயத்தைக் குறைக்க உதவும். அல்சைமர் நோய் முதுமையில் ஏற்படும் மறதியின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
படிப்பது மற்றும் எழுதுவது: தொடர்ந்து படிப்பது, எழுதுவது மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கான விளையாட்டுகளை விளையாடுவது மூளையை பலப்படுத்துகிறது.
சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பது: நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது மற்றும் சமூக நடவடிக்கைகளில் பங்கேற்பது மூளைக்கு நன்மை பயக்கும்.
யோகா மற்றும் தியான பயிற்சிகள்: யோகா மற்றும் தியான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வது, மனதிற்கு நிம்மதி அளித்து, மூளைக்கு ஆற்றலை அள்ளிக் கொடுக்கும்.
ஆரோக்கியமான உணவு: ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனை உட்கொள்வதால் மூளை ஆரோக்கியமாக இருப்பதுடன் அல்சைமர் நோய் வராமல் தடுக்கப்படுகிறது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும் என்பதோடு, இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதும் மிக அவசியம். இவை அனைத்தும் அல்சைமர் அபாயத்தைக் குறைக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | சரும பொலிவை அதிகரிக்கும் சீரக நீர்: தினமும் குடிச்சா ஜொலிக்கும் முகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ