குளிர்காலத்தில் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க 5 எளிய குறிப்புகள்

Diabetes Control In Winter: குளிர்காலத்தில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரும் டிப்ஸ்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 24, 2022, 02:34 PM IST
  • சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சுலப வழிகள்
  • தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும்
  • குளிர்காலத்தில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரும் டிப்ஸ்
குளிர்காலத்தில் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க 5 எளிய குறிப்புகள் title=

நியூடெல்லி: சரியான கவனிப்பு இல்லையென்றால், குளிர்காலத்தில் உங்கள் இரத்த சர்க்கரை அதிகரிக்கும். ரத்த சர்க்கரையை உங்கள் கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய உதவிக்குறிப்புகள் இவை. துரிதமாக செயல்பட்டு, நீரிழிவை கட்டுப்படுத்தும் சில சுகாதார குறிப்புகள் இவை. பருவகால மாற்றம் என்பது, அன்றாட வழக்கத்தை பெரிதும் மாற்றக்கூடியது. குளிர் காலத்தில், வெப்பநிலை வீழ்ச்சியடையும், அதேபோல் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பும் பரவலாக காணப்படுகிறது. உயர் இரத்த சர்க்கரை அளவுகளால், நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகிறது.  

குளிர்காலத்தில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க 5 குறிப்புகள்
குளிர் மாதங்களில் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிப்பதைப் பற்றி கவலைப்படுகிறீர்களா? நீரிழிவு நோயைத் தடுக்க நீங்கள் வீட்டில் முயற்சி செய்யக்கூடிய எளிய குறிப்புகள் இவை:

மேலும் படிக்க | வார்த்தைகளுக்குள் அடங்காத முருங்கையின் சர்க்கரை நோய் எதிர்ப்பு பண்புகள்

தவறாமல் உடற்பயிற்சி செய்யவும்
நீரிழிவு நோயை முக்கியமாக பாதிக்கும் ஒரு ஆபத்து காரணி உடல் பருமன் ஆகும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாததால், உடல் எடை அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்வது தவறினால், நடைப்பயிற்சியை மேற்கொள்வது ஓரளவுக்கு ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும். நடைபயிற்சியும் மெதுவானதாக இல்லாமல், விரைவானதாக இருப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

உணவு கட்டுப்பாடு 
உணவில் ஒரு கட்டுப்பாட்டை பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. உடல் நன்றாக செயல்படுவதை உறுதிப்படுத்த உதவுவது உணவுதான், இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும், பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த உணவுப் பொருட்களைத் தவிர்க்கவும்.

கண்காணிப்பு முக்கியம்
நீரிழிவு நோயின் அளவைக் கண்காணிப்பதன் அவசியத்தைப் புரிந்துகொள்வது அவசியம். நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது தங்கள் சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | முகத்தில் தொங்கும் சதைகள் அழகை கெடுக்கிறதா... இறுக்கமாக்க சில எளிய வழிகள்!

மன அழுத்தத்திற்கு விடை கொடுங்கள்
மன அழுத்தம் என்பது, உயர் இரத்த சர்க்கரை மற்றும் நீரிழிவு நோய்க்கான முக்கிய ஆபத்து காரணிகளில் ஒன்றாகும். தியானம், படித்தல் எழுதுதல் போன்றவற்றைப் பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தம் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.  
 
சக்தி அளவு 
உட்கொள்ளும் உணவின் அளவைக் கண்காணிப்பது முக்கியம். மேலும், உங்கள் உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்களை சேர்க்க வேண்டும். உங்கள் உடலுக்கு ஆற்றலை வழங்கும் மேக்ரோநியூட்ரியண்ட்ஸ் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவை சரிசம விகிதத்தில் இருக்க வேண்டும். 

(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலானவை. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வை நீக்கி ‘மன அமைதியை’ தரும் அற்புத மூலிகைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News