கர்ப்ப காலத்தில் சில உணவுகளைக் கட்டாயம் பெண்கள் தவிர்க்க வேண்டும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடலின் எடை அதிகரிப்பதை கவனமாக கண்காணிக்க வேண்டும்.
கர்பிணிகள் உண்ணும் சில உணவுகளில் கருச்சிதைவையோ அல் லது கரு வளர்ச்சியில் பாதிப்பையோ ஏற்படுத்தலாம். எனவே ஒவ்வொரு முறையும் கர்ப்பிணி பெண்கள், அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
கர்ப்பிணி தவிர்க்க வேண்டிய உணவுகள்:-
> டீ, காபி அதிகம் அருந்தக்கூடாது. கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் மாறக்கூடும்.
> அதிக மசாலா-காரம், எண்ணெய் செறிந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
> பதப்படுத்தப்பட்டு பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள் காலாவதியாகியிருந்தால் அவற்றை குடிக்ககூடாது.
> உடலுக்கு குடைச்சல் தரும் வாய்வு உணவுபொருட்களான வாழைக்காய், உருளைக்கிழங்கு, இறால்மீன் போன்றவைகளை அறவே தவிருங்கள்.