பொடுகு என்பது வறண்ட தலை அல்லது கிருமி பாதிப்பால் ஏற்படலாம். எக்ஸிமா, சோரியாஸிஸ் பாதிப்பு போன்றவைகளும் காரணமாக இருக்கலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படுகிறது.பொடுகினை தவிர்க்கவும், ஆரம்ப நிலையில் இருப்பதனை நீக்கவும் கீழ்க்கண்ட முறைகள் வெகுவாய் உதவும். அதிக பாதிப்பிற்கு மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
மருந்து கடைகளில் கிடைக்கும் சாதாரண ஆஸ்பிரின் மாத்திரை இரண்டினை பொடித்து தூளாக்கி சிறிது தண்ணீரில் கலந்து ஈரமான தலையில் நன்கு தடவி விடுங்கள். 2-3 நிமிடங்கள் ஊற வைத்து தலையை நன்கு நீரில் சுத்தம் செய்து விடலாம். சமையல் சோடா இரு டீஸ்பூன் எடுத்து சிறிது தண்ணீரில் கலந்து ஈர தலையில் மண்டையில் படும்படி தடவி 10 நிமிடங்கள் பொறுத்து குளிர்ந்த நீரில் தலையினை நன்கு அலசி விடவும்.
ஆப்பிள் சிடர் வினிகர் என்று கடையில் கிடைக்கும். இதனை சிறிதளவு நன்கு தலையில் தடவுங்கள். இதன் மருத்துவ குணம் கிருமி நாசினியாக செயல்படும். 15 நிமிடங்கள் தலையில் டவல் சுற்றி வைத்து பின்பு நன்கு தலையினை அலசி விடுங்கள். வாரம் இருமுறை கூட இதனைச் செய்யலாம். தேங்காய் எண்ணெய் கொண்டு தலையை மென்மையாய் மசாஜ் செய்யுங்கள். ஒரு மணி நேரம் கழித்து தலையை நன்கு சுத்தம் செய்து விடுங்கள்.இது மிக சிறந்த முடி பராமரிப்பாக அமையும்.
ஒரு சிறிய கப் நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவி ஐந்து நிமிடங்கள் கழித்து நீரில் தலைமுடியினை அலசுங்கள். பொடுகு மறையும் வரை தினமும் இதனை செய்யலாம். பொடி உப்பினை சிறிது நீரில் கலந்து ஈரமான தலையில் தடவி 5 நிமிடங்களில் அலசுங்கள். வெள்ளை வெள்ளையாக கொட்டுவது நீங்கும். பூண்ட நசுக்கி சாறு எடுத்து தலையில் தடவி பின்னர் ஷாம்பு போட்டு அலசினாலும் பொடுகு தொல்லை நீங்கும். ஆலிவ் எண்ணெய் கொண்டு தலையை மசாஜ் செய்து தலையை அலசுவதால் பொடுகு தொல்லை நீங்குவதோடு மட்டுமல்லாமல் முடியின் ஆரோக்கியமும் சிறந்து காணப்படும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR