Drinks to Control Uric Acid: இன்றைய காலகட்டத்தில் யூரிக் அமிலம் ஒரு பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. முதியவர்களுடன், இளைஞர்களும் இந்த கடுமையான பிரச்சனையினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட ஒரு நபர், நடக்க கூட முடியாமல், எழுந்து உட்கார முடியாமல் அவதிப்படுவார். இருப்பினும், எளிய வீட்டு வைத்தியம் மூலம் இதைக் கட்டுப்படுத்தலாம்.
மோசமான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக, உடலில் சேரும் பியூரின் என்ற தனிமம் யூரிக் அமிலத்தை உருவாக்குகிறது. யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், அது எலும்புகளின் மூட்டுகளில் படிந்து, அதில் இடைவெளிகளை உருவாக்குகிறது. இதன் காரணமாக, மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் தொடங்குகிறது. இதில், நடக்க மட்டுமின்றி உட்காருவதோ, எழுவதோ கூட சிரமமாகிறது. இந்த பிரச்சனை கீல்வாதம் மற்றும் சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் யூரிக் அமில பிரச்சனையினால், கீல்வாதம், சிறுநீரக கற்கள், மூட்டு வலி அல்லது வீக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் தவிர்க்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த 5 பானங்கள் உங்களுக்கு உதவும்.
யூரிக் அமிலத்தை குறைக்க வீட்டு வைத்தியமாக (Health Tips) பயன்படுத்தப்படும் இந்த 5 பானங்கள் உடலில் உள்ள நீர் சத்து குறையாமல் பாதுகாப்பதோடு மட்டுமின்றி மூட்டுகளில் தேங்கியுள்ள பியூரின்களை உடைத்து சிறுநீர் மூலம் வெளியேற்றும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் யூரிக் அமில அளவு எளிதில் கட்டுப்படுத்தப்படும். பாதிக்கப்பட்டவரின் பிரச்சனைகள் தானாகவே குறையும்.
எலுமிச்சை பானம்
கோடையில், சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சை நீர் உடலுக்கு ஆற்றலை தருவது மட்டுமின்றி pH அளவையும் சமன் செய்யும். இது யூரிக் அமில படிகங்களை கரைத்து சிறுநீர் மூலம் நீக்குகிறது. இதற்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து அருந்தி வர, விரைவில் யூரிக் அமில பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.
மேலும் படிக்க | விந்தணு குறைபாட்டை ஏற்படுத்தும் ‘சில’ உணவுகள்... எச்சரிக்கையா இருங்க!
இஞ்சி தேநீர்
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. அதிக யூரிக் அமிலத்தைக் குறைப்பதன் மூலம் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க இது உதவும். இதற்கு தண்ணீரை சூடாக்கி, அதில் இஞ்சி துருவலை சேர்த்து கொதிக்க விடவும். தேன் அல்லது எலுமிச்சையும் இதில் சேர்க்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது இதை உட்கொள்ளுங்கள்.
வெள்ளரி சாறு
வெள்ளரிக்காயில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது. இது சாலட் வடிவில் பரவலாக உண்ணப்படும் காய்கறி. நார்சத்து நிறைந்தது. இது யூரிக் அமிலம் உள்ளிட்ட உடல் பல வகை நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதன் சாற்றை தினமும் குடிப்பதும் பலன் தரும்.
ஆப்பிள் வினிகர்
ஆப்பிள் வினிகர் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.. யூரிக் அமிலத்தை உடலில் இருந்து வெளியேற்றி, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இதற்கு, தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 முதல் 2 ஸ்பூன் ஆப்பிள் வினிகரை சேர்த்து அதை குடிக்கவும். கொஞ்சம் சுவையாக இருக்க தேனையும் சேர்க்கலாம். ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு முறை குடிப்பது பலன் தரும்.
செர்ரி சாறு
செர்ரி பழங்களில் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்தும் பல தனிமங்கள் காணப்படுகின்றன. தினமும் செர்ரி ஜூஸ் குடிப்பதால் மூட்டு வலி, வீக்கம் மற்றும் மூட்டு வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Brain Stroke: மூளை பக்கவாதம்... காரணங்களும்.. அதன் ‘ஆபத்தான’ அறிகுறிகளும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ