Weight Loss Tips: எடை அதிகரிப்பு பற்றியக் கவலை அனைவருக்கும் அதிகமாகிவிட்டது. அழகுக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்காகவும் உடல் எடையை குறைக்க விரும்பினால், காலையில் சில கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க வேண்டும். என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைப் போலவே, எதை எப்போது சாப்பிடுகிறீர்கள் என்பதும் முக்கியமானது. நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து, பின்னர் சாப்பிட்டால், அதுவும் உடல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே உணவு உண்ணும் முறையும், கால இடைவேளையும் எடை இழப்பில் அவசியமானது.
இந்த உதவிக்குறிப்புகளை கடைபிடிப்பதன் மூலம் உங்கள் எடையை வேகமாக குறைக்கலாம். எப்படி உடல் எடையை குறைக்கலாம் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
எடை இழப்புக்கான வழிமுறைகள்:
காலையில் நடைப்பயிற்சி செய்வது உடலின் கலோரிகளை குறைக்கிறது. அதனால் தினமும் 15 நிமிடம் நடைப்பயிற்சி செய்யுங்கள்.
உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, தினமும் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யுங்கள், இதைச் செய்வதன் மூலம், உடல் கொழுப்பு வேகமாக குறையும்.
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இவ்வாறு செய்வது உடல் எடையை குறைக்க உதவும். மறுபுறம், நீங்கள் தினமும் காலையில் எழுந்து தண்ணீர் குடித்தால், அது உங்கள் உடலையும் நச்சுத்தன்மையாக்குகிறது.
மேலும் படிக்க | உடல் எடை குறைய அரிசி உணவை தவிர்க்க வேண்டுமா... நிபுணர்கள் கூறுவது என்ன!
காலையில் ஊறவைத்த உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாது. ஆரோக்கியமாக உடல் எடையைக் குறைக்கும் வழி இது.
தியானம் செய்வதன் மூலம் உங்கள் மனம் அமைதியாக இருக்கும், பலருக்கு மனதில் அமைதியின்மையும், பதற்றமுமே உடல் எடையை அதிகரிக்கச்ச் செய்கிறது.. அதனால் தான் தினமும் தியானம் செய்தால் உடல் எடையை குறைக்கலாம்.
காலை உணவை தவிர்க்க வேண்டாம். காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவாது. வழக்கமான உணவை உண்ணுங்கள்.
பல்வேறு விதமான தானிய உணவுகளை உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால், உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் அப்படியே இருக்கும்.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் ரகசியமாக தாக்கும்; இந்த 4 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்
நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள், சுறுசுறுப்பாக இருங்கள்.
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்ணுங்கள், உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியமானது.
இனிப்புப் பொருட்களை அதிகம் உண்ண வேண்டாம்.
ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிட வேண்டாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சோயா பால் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ