Weight Loss: உடல் எடையை குறைக்க ட்ரை ஃப்ரூட் டயட்

Benefits Of Pista: உடல் எடையை குறைக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்கிறோம், ஆனால் நாம் விரும்பிய பலனை பெற முடியவதில்லை, அத்தகைய சூழ்நிலையில், பிஸ்தாவை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், அது நன்மை பயக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 30, 2022, 09:33 AM IST
  • உடல் எடையை குறைக்க டிப்ஸ்
  • பிஸ்தா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
Weight Loss: உடல் எடையை குறைக்க ட்ரை ஃப்ரூட் டயட் title=

ட்ரை ஃப்ரூட்ஸ் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, சுகாதார நிபுணர்கள் அடிக்கடி இந்த ட்ரை ஃப்ரூட்ஸை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பிஸ்தாவை உட்கொள்ளலாம், அவை சோதனை அடிப்படையில் சிறந்த ட்ரை ஃப்ரூட்ஸ் மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும், ஏனெனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இயற்கை கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து இதில் காணப்படுகின்றன.

பிஸ்தா சாப்பிடுவதால் ஏற்படும் 5 பெரிய முக்கிய நன்மைகள்
பிஸ்தாவை ஏதேனும் ரெசிபி அல்லது இனிப்பு உணவில் சேர்த்தால், அதன் சுவை மேலும் அதிகரிக்கும், ஆனால் அது தொப்பையை குறைக்க உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா, வாருங்கள் இப்போது நாம் பிஸ்தா சாப்பிடுவதால் ஏற்படும் 5 பெரிய நன்மைகளைப் பற்றி பார்ப்போம். இது குறித்து கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணர் என்ன கூறுகிறார் என்பதை பார்ப்போம். 

மேலும் படிக்க | தண்ணீர் அதிகம் குடிக்கிறீர்களா... கவனம் தேவை

1. உடல் எடையை குறைக்க உதவும்
பிஸ்தா சாப்பிடுவதன் மூலம், நமது உடலுக்கு சிறந்த தாவர புரதம் கிடைக்கிறது, இது தசைகளை பலப்படுத்துகிறது. மேலும் அதிகரித்து வரும் உங்கள் எடையை குறைக்க நீங்கள் திட்டமிட்டால், கண்டிப்பாக ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி பிஸ்தாவை சாப்பிடுங்கள்.

2. எலும்புகள் வலுவாக இருக்கும்
வயதானால் எலும்புகள் வலுவிழப்பது தவிர்க்க முடியாதது, ஆனால் சிலருக்கு இளம் வயதிலேயே இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது, அத்தகைய சூழ்நிலையில், பிஸ்தாவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும், ஏனெனில் அதில் வைட்டமின்கள், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை எலும்புகளுக்கு நன்மை பயக்கும். 

3. நீரிழிவு நோய்க்கு இது 100% உதவியாகும்
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சர்க்கரை நோய் ஒரு தீவிர பிரச்சனையாக மாறியுள்ளது. உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், தினமும் காலை உணவில் பிஸ்தாவை சாப்பிட்டுங்கள்,  இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும்.

4. மெமரி
சிலருக்கு நினைவாற்றல் மிகவும் பலவீனமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், பிஸ்தாவின் உதவியுடன் நினைவாற்றல் அதிகரிக்கும், எனவே இதை தினமும் உட்கொள்ளுங்கள்.

5. கண்பார்வை அதிகரிக்கும்
பிஸ்தா ஒரு உலர் பழமாகும், இதில் ஜீயாக்சாண்டின் மற்றும் லுடீன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன, இது நமது உடல் ஃப்ரீ ரேடிக்கல்களைத் தவிர்க்க உதவுகிறது. தினமும் உணவில் சேர்த்து வந்தால், கண்பார்வை மேம்படும்.

மேலும் படிக்க | Kitchen Hacks: கசப்பான வெள்ளரிக்காயை எப்படி சரி செய்வது, எளிய டிப்ஸ் இதோ

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News