ஆரோக்கியத்தைக் கொடுக்கும் பழங்களே உடல்நலனைக் கெடுக்கும்! நீரிழிவு நோயாளிகளுக்கு எதிரியாகும் பழங்கள்

Fruits & Diabetes: எல்லாவற்றையும் சாப்பிடும் சுதந்திரம் வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தால், உணவு மட்டுமல்ல, பழங்கள் சாப்பிடுவதற்கும் கட்டுப்பாடு உண்டு 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 26, 2024, 06:44 PM IST
  • நீரிழிவு நோயாளிகள் தடா போட வேண்டிய பழங்கள்!
  • நீரிழிவை அதிகரிக்கும் பழங்கள்
  • ஆரோக்கியத்தை கெடுக்கும் பழங்கள்
ஆரோக்கியத்தைக் கொடுக்கும் பழங்களே உடல்நலனைக் கெடுக்கும்! நீரிழிவு நோயாளிகளுக்கு எதிரியாகும் பழங்கள் title=

சர்க்கரை நோயாளிகளால் விரும்பிய அனைத்தையும் உண்ண முடியாது. எல்லாவற்றையும் சாப்பிடும் சுதந்திரம் வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தால், உணவு மட்டுமல்ல, பழங்கள் சாப்பிடுவதற்கும் கட்டுப்பாடு உண்டு. இல்லையென்றால் மோசமான உடல்நிலை பாதிப்புகள் ஏற்படலாம். 

பழங்கள்

ஆரோக்கியத்திற்கு தேவையான சமச்சீர் உணவு என்று வரும்போது, ​​தினசரி உணவில் பழங்களைச் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இவற்றில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன என்பதுடன் பொதுவாக குறைந்த கலோரிகள் இருக்கின்றன.

நீரிழிவு நோயாளிகளும் பழங்களும்

ஆனால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில பழங்கள் ஆபத்தானதாக உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த பழங்களை தவிர்க்க வேண்டும் என்று பார்ப்போம். இந்தப் பழங்களை சாப்பிட்டால் அது ஆரோக்கியத்தை மேலும் மோசமாக்கும்.

நீரிழிவு நோய்க்கு எந்த பழங்கள் ஆபத்தானவை
அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட சில பழங்கள் உள்ளன, அவற்றை உண்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும், ஏனெனில் உடல் குளுக்கோஸை உடைக்க போராடுகிறது, இதனால், வகை 1 மற்றும் 2 நீரிழிவு நோய் ஏற்படும். உங்கள் உடல் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை அழிக்கும்போது வகை 1 நீரிழிவு ஏற்படுகிறது.

அதேசமயம், வகை 2 நீரிழிவு பெரும்பாலும் உடல் பருமன் அல்லது போதிய உடல் செயல்பாடுகளுடன் தொடர்புடையது. நிபுணர்களின் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகள் அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) கொண்ட பழங்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க | கருவளையத்தை கட்டுப்படுத்த தக்காளி போதும்..‘இப்படி’ பயன்படுத்துங்கள்!

நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள்

வாழைப்பழங்கள்: மிக அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் இயற்கை சர்க்கரை உள்ள வாழைப்பழங்களை தொடர்ந்து உட்கொள்ளும் போது இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

திராட்சை: நிபுணர்களின் கூற்றுப்படி, உயர் கிளைசெமிக் குறியீடு கொண்ட திராட்சைப்பழம் இரத்த சர்க்கரை சட்டென்று அதிகரிக்க வழிவகுக்கும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது.

செர்ரிப் பழங்கள்: செர்ரி பெரும்பாலும் ஆரோக்கியமானதாகக் கருதப்பட்டாலும், அவற்றில் சர்க்கரை அதிகமாக இருக்கும், எனவே செர்ரியை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

மாம்பழம்: இனிப்பு மற்றும் சுவையான ருசியில் கிடைக்கும் மாம்பழத்தைப் பார்த்தாலே வாயில் எச்சில் ஊறும். ஆனால் மாம்ம்பழத்தில் அதிக சர்க்கரை உள்ளது, அளவாக சாப்பிடாவிட்டால் இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரித்துவிடும்.

மேலும் படிக்க | தக்காளி சூப்பர்புட் தான்... ஆனால் இந்த பிரச்சனை இருக்கிறவங்க தவிர்ப்பது நல்லது

அன்னாசி: அன்னாசி பழத்தில் அதிக அளவு சர்க்கரை உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரித்து, நீரிழிவு நோயாளிகளை கடுமையாக பாதிக்கும்.

அத்திப்பழம்: மிகவும் ஆரோக்கியமானவை என்றாலும், அத்திப்பழத்தில் நிறைய சர்க்கரை இருப்பதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக உயரும்.

உலர்பழங்கள்: பெரும்பாலும் சர்க்கரை மற்றும் கலோரிகளில் செறிவூட்டப்பட்ட உலர்பழங்கள் ஆபத்தானவை மற்றும் அதிக அளவில் உட்கொண்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவித்துவிடும்.

பேரிச்சம்பழம்: பேரிச்சம்பழம் மிகவும் நல்லது மற்றும் செறிவூட்டப்பட்ட சர்க்கரையைக் கொண்டுள்ளது, இது இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பை ஏற்படுத்தும். மேலும், அவை மிதமான கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன, எனவே, இரத்த சர்க்கரையை அதிகரித்துவிடும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கருவளையங்களை மாயமாய் மறைய செய்யும் சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News