எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் D நிறைந்த உணவுகளை சேர்ப்பது மிகவும் அவசியம். ஆனால், சில உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, நமது எலும்புகளுக்கு கேடு விளைவிக்கும். அதனால், அந்த உணவுகளை முழுமையாக தவிர்க்க முடியவில்லை என்றாலும், குறைத்துக் கொள்வது நல்லது. எலும்புகளின் கால்ஷியத்தை உறிஞ்சும் உணவுகள் பற்றி ஊட்டசத்து நிபுணர்கள் கூறுவதை அறிந்து கொள்ளலாம். எலும்புகள் வலுவிழந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்னும் எலும்பு மெலிதல் நோய், மூட்டு வலிகள், எலும்பு முறிவு போன்ற பல உடல் நல பிரச்சனைகள் நம்மைச் சூழ்ந்து கொள்ளத் தொடங்குகின்றன. அதிலும், ஆஸ்டியோபோரோசிஸ் நோயை முற்றிலுமாகத் தீர்க்க எந்த மருந்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எலும்பு மெலிதல் நோயின் காரணமாக வரும் வலியை, மருந்துகள் மூலம் குறைக்க மட்டுமே முடியும். அதனால் அதிக எச்சரிக்கை தேவை. எனவே, உடலில் உள்ள கால்ஷியத்தை உறிஞ்சி, எலும்புகளை வலுவிழக்க செய்யும் உணவுகளை தவிர்ப்பது, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
சோடியம் அதிகம் உள்ள உணவுகள்
அதிக அளவில் உப்பு உட்கொள்வதால் உடலில் கால்சியம் அளவு குறைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் அபாயத்தை அதிகரிக்கிறது. Osteoporosis என்பது ஒரு நோயாகும். இதில் எலும்புகள் பலவீனமடைந்து எளிதில் முறிவு ஏற்படும். ஆசியா பசிபிக் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வில், அதிக உப்பு சாப்பிடுபவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிக இனிப்பான உணவுகள்
அதிக இனிப்பு சாப்பிடுவது எலும்பு ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். சர்க்கரையை அதிகமாக சாப்பிடும் நிலையில், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு கிடைக்காத போது, எலும்புகளில் இருந்து கால்ஷியம் உறிஞ்சப்பட்டு அவை, பலவீனமடைகின்றன.
காஃபின்
காஃபின் உட்கொள்வது பெண்களின் எலும்பு அடர்த்தியையும் குறைக்கும். காஃபின் எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி பலவீனமடையச் செய்கிறது. காபியில் காஃபின் உள்ளதால், அளவுக்கு அதிகமாக காபி அருந்துவது நல்லதல்ல.
சோடா
அதிகமாக சோடா குடித்தால், அது உங்கள் எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். இது பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு அபாயத்தையும் அதிகரிக்கிறது. தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வில், சோடாக்கள் குடிப்பதால், உடலில் உள்ள கால்ஷியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழந்துவிடும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!
சிக்கன்
சிக்கன் அதிகம் சாப்பிடுவதும் எலும்புகளை சேதப்படுத்தும். விலங்கு புரதங்கள் இரத்தத்தை சிறிது அமிலமாக்குகின்றன. அத்தகைய சூழ்நிலையில், இரத்தத்தில் pH இன் மாற்றத்திற்கு உடல் உடனடியாக எதிர்வினையாற்றும் போது, எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி அதனை சமன்படுத்துகிறது. இதனால் உடலில் கால்சியத்தின் அளவு குறையத் தொடங்குகிறது.
மது பானம்
2015ம் ஆண்டு BMJ ஓபனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மது அருந்துவது எலும்பு அடர்த்தியை குறைக்கும் என்பதால், எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க மது அருந்த வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மதுவை முழுமையாக கை விட முடியவில்லை என்றால், குறைந்த பட்சம் அதனை குறைக்க முயற்சிக்கவும் என தேசிய ஆஸ்டியோபோரோசிஸ் அறக்கட்டளை அறிவுறுத்துகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ