நாடெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. பருப்பு வகைகள் அனைத்துமே நமது உடல்நலத்திற்கு மிகவும் அத்தியாவசியமான சத்துக்களை கொண்டது. இதில் தென்னிந்திய சமையலில் அன்றாடம் இடம்பெறும் ஒரு பருப்பு வகை என்றால், அது துவரம் பருப்பு தான். சுவையும் ஊட்டசத்தும் கொண்ட துவரம் பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ ரீதியான நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஏராளமான புரதச்சத்து கொண்ட துவரம் பருப்பு
துவரம் பருப்பில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் வளர்ச்சிக்கு புரத சத்து மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை துவரம் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். இதனுடன், இந்த பருப்பு அனைத்து பருவ காலத்திலும் சாப்பிட ஏற்ற பருப்பு. எளிதில் ஜீரணிக்கக்கூடிய இந்த பருப்பினை காலை, மாலை மற்றும் இரவு என எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
துவரம் பருப்பில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள்
துவரம் பருப்பில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இரும்பு, புரதம், மெக்னீசியம், கால்சியம், ஃபோலிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவை இதில் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனுடன், மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், செலினியம் போன்ற கூறுகளும் இதில் அதிகம் காணப்படுகின்றன, துவரம் பருப்பை தினம் சேர்த்துக் கொள்வதால் உங்கள் உடலின் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக (Health Tips) இருக்கும். உடலுக்கு ஆற்றலைப் அள்ளிக் கொடுக்கக் கூடிய ஆற்றல் கொண்ட துவரம் பருப்பு, சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தரும்.
செரிமான அமைப்பை பலப்படுத்தும் துவரம் பருப்பு
புரதம் தவிர, துவரம் பருப்பில் நல்ல அளவு நார்ச்சத்தும் உள்ளது. அதிக நார்ச்சத்து இருப்பதால், செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்ற நார்ச்சத்து உதவுகிறது. இதனால், வயிற்றுப்போக்கு, வாந்தி, மலச்சிக்கல் போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் துவரம் பருப்பு
இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக இரத்த அழுத்தம், இளம் வயதினர்களுக்கு கூட ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால், இரத்த குழாயை விரிவடைய செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைந்து, உடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது. எனவே இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபட அடிக்கடி உணவில் துவரம் பருப்பை சேர்த்து கொள்வது அவசியம்.
மேலும் படிக்க | சம்மரில் எடை குறைக்க இந்த சூப்பர் பானங்கள் உதவும்: குடிச்சு பாருங்க!!
கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்தை அளிக்கும் துவரம் பருப்பு
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேவை. இதனுடன், எளிதில் ஜீரணிக்கக்கூடிய லைட்டான உணவும் தேவை. அத்தகைய சூழ்நிலையில், துவரம் பருப்பு அவர்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும். இதில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அத்தியாவசிய சத்தான ஃபோலிக் அமிலத்தைத் தவிர, இதில் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளன. ஃபோலிக் அமிலம் அமிலத்தன்மை பிரச்சனையில் இருந்தும் பாதுகாக்கிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | வயிற்று உப்புசம்: வயிற்றில் வாயு பிரச்சனையாகிவிட்டதா? வீட்டு மருத்துவம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ