காலையில் எழுந்தவுடன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

Garlic | தினமும் காலையில் ஒரு பல் பூண்டை மென்று சாப்பிடுவது கல்லீரலில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் நீக்குவதுடன், என்சைம்களை செயல்படுத்தி உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் உதவுகிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 8, 2025, 07:47 AM IST
  • பூண்டு ஆரோக்கிய நன்மைகள்
  • கல்லீரல் சுத்தம் செய்யக்கூடியது
  • நச்சுகளை அகற்றும் தன்மை உள்ளது
காலையில் எழுந்தவுடன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? title=

Garlic Health Benefits Tamil | பூண்டு பற்றி இங்கு புதிதாக எதுவும் சொல்லிவிடப்போவதில்லை. ஏற்கனவே நீங்கள் அறிந்திருக்கக்கூடிய தகவல்கள் தான். பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. தினமும் காலையில் ஒரு பல் பூண்டை சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கும். அவை என்ன என்பதையே இங்கு தெளிவாக தெரிந்து கொள்ளப்போகிறோம். பூண்டு நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாத்து, உடலுக்கு போதுமான ஆற்றலை வழங்குகிறது. மேலும், பூண்டு செரிமான அமைப்பை வலுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

பச்சை பூண்டில் அல்லிசின் அதிகமாக இருக்கிறது. பூண்டை வெறும் வயிற்றில் உட்கொண்டால், உடலும் நச்சுத்தன்மையை நீக்கும். மேலும், உடல் கொழுப்பைக் குறைக்கும். பிரபல டயட்டீஷியன் ஜீனல் படேல் கூறுகையில், பூண்டு கொலஸ்ட்ரால், நீரிழிவு மற்றும் பிபியை சீராக்கும். இதனை தினமும் உட்கொள்வதால் சளி மற்றும் இருமல் குணமாகிறது என கூறியுள்ளார்.

கல்லீரல் சுத்தம்

நம் உடலின் மிக முக்கியமான உறுப்பு கல்லீரல். உடலில் உள்ள நச்சுகளை அகற்றுவது முதல் அனைத்து உடல் பாகங்களுக்கும் தேவையான சத்துக்களை பிரித்து அனுப்புவது வரை எல்லாம் வேலைகளையும் சரியாக செய்யக்கூடியது கல்லீரல் தான். அத்தகைய கல்லீரலை மிகவும் கவனமாக, ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கல்லீரலில் ஏற்படும் பாதிப்பு ஒரே நாளில் தெரிந்துவிடாது. நாட்பட்ட அளவில் மட்டுமே தெரியும். அத்தகைய கல்லீரல் பாதிப்புகளை குறைப்பதில் பூண்டு உதவியாக இருக்கும். தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் கல்லீரலில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் நீக்குகிறது.

பூண்டு கல்லீரல் என்சைம்களை செயல்படுத்துகிறது, இது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. இந்த மசாலா கல்லீரலை சுத்தப்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. கல்லீரலை சுத்தப்படுத்த, தினமும் பூண்டை சாப்பிடுங்கள். இந்த மசாலா உடலின் முக்கிய நச்சு உறுப்பான கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

ஃப்ரீ ரேடிக்கல்கள் பாதுகாப்பு

செல்கள் மூலமே உடல் இயக்கம் நடக்கிறது. இந்த செல்கள் இயக்கம் ஆரோக்கியாமக இருக்க வேண்டும். அவற்றுக்கு பூண்டு உதவுகிறது.  ஏனென்றால் பூண்டில் அல்லிசின் உள்ளது. இந்த கலவைகள் உடலில் ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன, இது ஃப்ரீ ரேடிக்கல்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் செல்களைப் பாதுகாக்கிறது. 

நச்சுக்கள் நீக்கம்

எப்போதும் எல்லோரும் தவறாமல் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் உடலுக்கு கேடு விளைவிக்கும் நச்சு உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். எல்லா வியாதிகளும் ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. நாட்பட்ட அளவில் மட்டுமே வரக்கூடியவை. எனவே உணவை தினமும் கவனமாக சாப்பிட வேண்டும். தினமும் தினம் சாப்பிடும் உணவுகள் தான் நச்சுகள் குவிந்து நோயாக மாறுகின்றன. அத்தகைய நச்சுக்கள் வெளியேற்ற பூண்டு உதவுகிறது. பூண்டில் உள்ள கந்தக கலவைகள் ஈயம் மற்றும் பாதரசம் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த கன உலோகங்களை வெளியேற்ற உதவுகிறது. மாசு மற்றும் தீங்கு விளைவிக்கும் வாயுக்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செரிமானம்

பூண்டை உட்கொள்ளும்போது செரிமான அமைப்பில், அதாவது குடலில் தேங்கியிருக்கும் நச்சுத்தன்மையை நீக்குகிறது. தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு குடல்கள் சுத்தமாகும். குடல் சுத்தமாகும்போது, மலச்சிக்கல் எல்லாம் இருக்காது.

இரத்தத்தை சுத்தம்

பூண்டு இரத்தத்தை சுத்தப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதை சாப்பிடுவதால், பிபி சாதாரணமாக இருக்கும் மற்றும் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

மேலும் படிக்க | சென்னையிலும் HMPV வைரஸ்... பாதுகாத்துக் கொள்ள சாப்பிட வேண்டியவையும்...தவிர்க்க வேண்டியவையும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News