Health Alert: ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஜூஸ்கள்! ஆனால் சிறுநீரகத்தை சின்னாபின்னமாக்கிடும்

Side Effects Of Healthy Drinks: சில உறுப்புகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பானங்கள், வேறு சில உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 13, 2023, 07:04 AM IST
  • ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஜூஸ்கள்
  • பழச்சாற்றின் பக்க விளைவுகள்
  • மோசமான பக்கவிளைவை ஏற்படுத்தும் இளநீர்
Health Alert: ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஜூஸ்கள்! ஆனால் சிறுநீரகத்தை சின்னாபின்னமாக்கிடும் title=

ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதற்கு நமது உணவில் இடம் பெறும் உணவுகளும் பானங்களும் தான் அடிப்படை ஆதாரம் ஆகும். எனவே, நமது தினசரி உணவில் சரியான உணவுகள் மற்றும் பானங்களைச் சேர்ப்பது அவசியம். ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பானங்கள் நமது உடலின் உள் உறுப்புகளுக்கு ஊட்டச்சத்தை அளிக்கின்றன. ஆனால் எந்தவொரு விஷயத்திலும் சாதகமும் பாதகமும் சேர்ந்து இருப்பது போல, சில உறுப்புகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பானங்கள், வேறு சில உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை மறுக்க முடியாது.

சிறுநீரகம் நமது உடலை சுத்தீகரிக்கும் ஒரு உறுப்பு. ஆரோக்கியமானவைகளாக கருதப்படும் சில உணவுகள், சிறுநீரகத்தை பாதிக்கும் என்பது அதிர்ச்சியளிக்கிறது என்றாலும், அது நிதர்சனமான உண்மை. ஆரோக்கியமாக இருந்தாலும், சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும் சில பானங்கள் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்த்க் கொள்வோம். இந்த பானங்களை அதிகமாக அருந்துவது சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும். 

மேலும் படிக்க | ஹை கொலஸ்ட்ரால் பிரச்சனையா? இந்த  ஜூஸ் குடிச்சா ஜம்முனு கண்ட்ரோல் பண்ணலா

சிறுநீரகத்தை பாதிக்கும் இளநீர் 
ஆரோக்கியமான இயற்கை பானங்களில் முதலிடத்தை பிடிக்கும் இளநீர் உடலுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கிறது. ஆனால் அதை அதிகமாக பருகுவது சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குறிப்பாக சிறுநீரக நோயாளிகள் இளநீரை அளவாக பருக வேண்டும். இளநீரில் அதிக பொட்டாசியம் இருப்பதால், அது சிறுநீரகங்களுக்கு தீமை செய்யலாம்.

side effects of tender coconut
 
சிறுநீரகத்தை பாதிக்கும் ஆரஞ்சு ஜூஸ்
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆரஞ்சு பழச்சாற்றில் பல நன்மைகள் உள்ளன, ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது சிறுநீரகத்திற்கும் நன்மை அளித்தாலும், அதிக அளவில் குடிப்பதால் சிறுநீரகம் பாதிக்கப்படும். ஏனெனில் ஆரஞ்சு பழச்சாற்றிலும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

சிறுநீரகத்தை பாதிக்கும் இனிப்பு பானங்கள்
எந்தவொரு பானமும் உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது என்றாலும், அதில் அதிகப்படியான சர்க்கரை இருந்தால், அது சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும். உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது இரத்த நாளங்கள் சுருங்க ஆரம்பித்து சிறுநீரகத்தை பாதிக்கிறது.

மேலும் படிக்க | காலையில் இதை சாப்பிட்டால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருப்பீர்கள்

சிறுநீரகத்தை பாதிக்கும் காபி, தேநீர்
அதிக அளவு டீ மற்றும் காபி உட்கொள்வது உங்கள் சிறுநீரகத்தை பாதிக்கலாம். காஃபின் ஒரு உற்சாகமூட்டி என்பதால், இது இரத்த ஓட்டம் மற்றும் இரத்த அழுத்த அளவை அதிகரிக்கும், இது எதிர்பாராத விதமாக உங்கள் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதேபோல, அளவுக்கு அதிகமான காபி சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும்.

எலுமிச்சை ஜூஸ் பக்க விளைவுகள்

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழி எலுமிச்சை பழ ரசத்திற்கு பொருந்தும். அதிக அமிலத்தன்மை கொண்ட சிட்ரஸ் பழமான எலுமிச்சை சாற்றை அதிகமாக பருகினால் அதிலிருக்கும் அமிலத்தன்மையின் காரணமாக, பல் கூச்சம் ஏற்பட்டு பல் சிதைவு ஏற்படும். பற்களில் எலுமிச்சை சாறு நேரடியாகப் படுவதைத் தவிர்க்க ஸ்ட்ராக்களைப் பயன்படுத்தலாம். எலுமிச்சை ஜூசை குடித்த பிறகு, பல் துலக்குவதைத் தவிர்க்க வேண்டும். எலுமிச்சை ஜூஸுடன் நிறைய தண்ணீர் குடிப்பது பல் சிதைவைத் தடுக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக் கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | தனியா: சுகர் லெவெல் முதல் இரத்த அழுத்தம் வரை.. அற்புதமான வீட்டு வைத்தியம், இப்படி உட்கொள்ளலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News