Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பது இந்நாட்களில் பலருக்கு உள்ள ஒரு பெரிய, பொதுவான பிரச்சனையாக உள்ளது. அதுவும் தொப்பை கொழுப்பு அதிகமாகி விட்டால், அதை குறைப்பது ஒரு பிரம்ம பிரயத்னமாகவே உள்ளது. உடல் பருமனை சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். இல்லையெனில் இதன் காரணமாக கடுமையான நோய்களையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். மக்கள் உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்கள். எனினும் சில இயற்கையான, எளிய வழிகளிலும் நாம் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நாம் நமது சமையலில் பல உணவு வகைகளில் பயன்படுத்தும் வெந்தயம், எடை இழப்பு முயற்சியில் பெரிய அளவில் உதவும் என்பது பலருக்கு தெரிவதில்லை. குறிப்பாக தொப்பை கொழுப்புக்கு (Belly Fat) குட்பை சொல்ல விரும்பும் நபர்கள், தங்கள் காலை உணவில் வெந்தயத்தை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். வெந்தய விதைகளை உணவின் ஒரு அங்கமாக்கி உடல் எடையை குறைப்பதற்கான வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Weight Loss: உடல் எடையை குறைக்க வெந்தயத்தை உணவில் சேர்ப்பது எப்படி?
உடல் எடையை குறைக்க, தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை உட்கொள்ள வேண்டும். இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை போட்டு, இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலை வெறும் வயிற்றில் இந்த வெந்தய விதை தண்ணீரைக் குடிக்கவும். சில வாரங்களில் வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள்.
மேலும் படிக்க | ஓரே இரவில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும் பப்பாளி இலை: இப்படி சாப்பிடுங்க
Fenugreek: வெந்தயத்தின் ஆரோக்கிய நன்மைகள்
- வெந்தயத்தில் உள்ள கூறுகள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
- வெந்தயத்தை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம், உங்கள் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை எளிதாகக் குறைக்கலாம்.
- வயிற்று கொழுப்பை அகற்ற விரும்பும் நபர்களுக்கு வெந்தயம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
வெந்தயத்தில் உள்ள கூறுகள்
வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதன் காரணமாக எடை இழப்பில் பெரிய அளவில் உதவி கிடைக்கும். வெந்தயத்தை உட்கொள்வதன் மூலம் நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வுடன் இருக்கும். இதன் காரணமாக தேவையற்ற, ஆரோகியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, வெந்தயத்தில் அமினோ அமிலம் 4 ஹைட்ராக்ஸிலூசின் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். மேலும் வெந்தயம் உடலில் கொழுப்பு உறிஞ்சப்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.
வெந்தய விதைகள் மட்டுமின்றி வெந்தய பொடியும் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதையும் அவ்வப்போது சமையலில் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ