ஓவரா ஏறும் எடையை உடனே குறைக்க வெந்தயத்தை இப்படி சாப்பிட்டால் போதும்

Weight Loss Tips: எடை குறைப்பு முதல் நீரிழிவு நோய் வரை பல வகைகளில் வெந்தயம் பயனுள்ளதாக இருக்கின்றது. வெந்தயத்தின் பன்முகத்தன்மை மற்றும் எடை இழப்பில் வெந்தயத்தின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் கானலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 25, 2023, 09:43 AM IST
  • வெந்தயத்தில் உள்ள உணவு நார்ச்சத்து, உடலில் அதிகப்படியான கலோரி உட்கொள்ளலின் எதிர்விளைவுகளை மாற்றுவதாக அறியப்படுகிறது.
  • இதில் உள்ள வைட்டமின்-சி உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, நச்சுத்தன்மையை நீக்க உதவும்.
  • வெந்தயம் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும்.
ஓவரா ஏறும் எடையை உடனே குறைக்க வெந்தயத்தை இப்படி சாப்பிட்டால் போதும் title=

Weight Loss Tips: இந்தியாவில் சமையலறைகள் மிகவும் கவர்ச்சிகரமானவை. இங்கு பல்வேறு விதமான மூலிகைகளும் மசாலாப் பொருட்களும் இருக்கின்றன. இவை சுவையை அதிகரிப்பதுடன் இன்னும் பல வேலைகளையும் செய்கின்றன. அப்படி ஒரு மிக முக்கியமான மசாலா பொருள்தான் வெந்தயம். இது உணவு வகைகளுக்கு தனித்துவமான நறுமணம் மற்றும் சுவையை தருகின்றது. ஆனால் இதில் ஏராளமான ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. அவை பல வழிகளில் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

எடை குறைப்பு (Weight Loss) முதல் நீரிழிவு நோய் வரை இது பல வகைகளில் பயனுள்ளதாக இருக்கின்றது. வெந்தயத்தின் பன்முகத்தன்மை மற்றும் எடை இழப்பில் வெந்தயத்தின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் கானலாம். 

உடல் எடையை குறைக்கும் வெந்தயம் (Fenugreek For Weight Loss)

மிகவும் பழமையான மருத்துவ தாவரங்களில் ஒன்றாக வெந்தயம் கருதப்படுகிறது. இதில் கணிசமான அளவு நார்ச்சத்து, பாஸ்போலிப்பிட்கள், கிளைகோலிப்பிட்கள், ஒலிக் அமிலம், லினோலெனிக் அமிலம், லினோலிக் அமிலம், கோலின், வைட்டமின்கள் ஏ, பி1, பி2, சி, நிகோடினிக் அமிலம், நியாசின் மற்றும் பல செயல்பாட்டு கூறுகள் உள்ளன. எடை இழப்பில் வெந்தயம் எவ்வாறு பயன் அளிக்கின்றது என்பதை இங்கே காணலாம். 

1. வெந்தயத்தில் (Fenugreek) உள்ள உணவு நார்ச்சத்து, உடலில் அதிகப்படியான கலோரி உட்கொள்ளலின் எதிர்விளைவுகளை மாற்றுவதாக அறியப்படுகிறது.
2. இதில் உள்ள வைட்டமின்-சி உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, நச்சுத்தன்மையை நீக்க உதவும்.
3. வெந்தயம் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும்ம், எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
4. வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டை மேலும் ஊக்குவிக்கவும் உதவும்.
5. உணவு நார்ச்சத்து மற்றும் வேறு சில அத்தியாவசிய தாதுக்கள் உடலின் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலை மெதுவாக்க உதவுகின்றன, மேலும் கொழுப்பு திரட்சியின் அபாயங்களைக் குறைக்கின்றன.

தினமும் வெந்தய விதைகளை உட்கொள்வது சரியா? இதில் ஏதேனும் பக்க விளைவு உள்ளதா?

சரியான அளவில் உட்கொண்டால், வெந்தயம் பொதுவாக பாதுகாப்பானவையாக கருதப்படுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். எனினும், இதை அதிகமாக உட்கொள்வது குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வீக்கம், வாயு மற்றும் தோல் வெடிப்பு உள்ளிட்ட சில பொதுவான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். எனவே, எடை குறைப்புக்காக இதை உட்கொள்ளும் முன் ஒரு நிபுணரை அணுகுவது சிறந்ததாக இருக்கும். 

மேலும் படிக்க | பாலை விட அதிகம் கால்சியம் உள்ள ‘சூப்பர்’ உணவுகள்!

எடை இழப்புக்கு வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்துவது?

வெந்தயத்தை பல வழிகளில் பயன்படுத்தலாம். எனினும், அதை அப்படியே முழுமையாகவோ அல்லது அரைத்து பொடியாகவோ பயன்படுத்துவது மிக சிறந்ததாக இருக்கும்.  நமது உணவில் வெந்தயத்தை சேர்க்கும் சில முறைகளை பற்றி இங்கே காணலாம். 

1. உடல் எடையைக் குறைக்க வெந்தய நீர்: 

அதிகாலையில் டிடாக்ஸ் தண்ணீரைக் குடிப்பது பல ஆண்டுகளாக பலர் பின்பற்றும் ஒரு நல்ல பழக்கமாக இருந்து வருகிறது. செப்புக் கிளாஸில் இரவு முழுவதும் தண்ணீரை வைத்துவிட்டு மறுநாள் காலையில் குடிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஒன்று முதல் இரண்டு ஸ்பூன் வெந்தய விதைகளை அதே தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதை குடிக்கவும்.

2. எடை இழப்புக்கான வெந்தய டீ: 

உடல் எடை மற்றும் தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைக்க நினைப்பவர்கள் தங்கள் நாளின் துவக்கத்தில் வெந்தய டீயை உட்கொள்ளலாம். வழக்கமான தேநீருக்குப் பதிலாக இந்த மூலிகை தேநீரை குடித்து வந்தால் கூடுடலாக உடலில் சேர்ந்துள்ள கொழுப்பு கரையும். இதற்கு ஒரு டீஸ்பூன் வெந்தய விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை பாதியாக குறைக்கவும். இந்த தேநீரை வடிகட்டி, சிறிது தேன் சேர்த்து குடிக்கவும். 

3. எடை இழப்புக்கு வறுத்த வெந்தயம்:

சிறிது வெந்தயத்தை உலர்த்தி, அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளலாம். இதை தயிர் பச்சடி, கலந்த சாதங்கள், காய்கறிகள், சால்ட் என பல உணவுகளில் சேர்க்கலாம். இது கூடுதல் சுவைய சேர்ப்பதுடன் உடல் எடையையும் குறைக்க உதவும்.

4. முளை கட்டிய வெந்தயம்:

சிற்றுண்டிகளுக்கு முளைகளை சாப்பிடுவதில் விருப்பம் உள்ளவர்கள் காலையில் முளை கட்டிய வெந்தயத்தை சாப்பிடலாம். இதற்கு வெந்தய விதைகளை முளைக்க வைத்து உங்கள் வழக்கமான காலை உணவுடன் சேர்த்து உட்கொள்ளலாம். முளைகட்டிய வெந்தயத்தில் அதிக நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்களின் நன்மை கிடைக்கிறது. இதற்கு வெந்தயத்தை கழுவி, ஈரமான துணியில் மூடி, இரண்டு அல்லது மூன்று இரவுகள் அப்படியே விடவும். பின் இவை முளைத்த பிறகு பயன்படுத்தவும். 

மேலும் படிக்க | சருமத்தை பளபளப்பாக்கும் செம்பருத்தி மலர்! பூச்சூடினால் அழகும் ஆரோக்கியம் நிச்சயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News