தைப்பொங்கல்: கர்ப்பிணிகள் கரும்பு சாப்பிடலாமா? சாப்பிடக் கூடாதா?

பொங்கலையொட்டி அனைவர் குடும்பங்களிலும் கரும்பு வாங்கி சாப்பிடுவார்கள். ஒருவேளை வீட்டில் கர்ப்பிணிகள் இருந்தால் அவர்கள் கரும்பு சாப்பிடலாமா? கூடாதா? என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. என்ன செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 15, 2023, 12:29 PM IST
தைப்பொங்கல்: கர்ப்பிணிகள் கரும்பு சாப்பிடலாமா? சாப்பிடக் கூடாதா? title=

தாய்மை அடைந்திருக்கும் பெண்கள், உண்ணும் உணவு முதல் நடைப்பயிற்சி, உட்காருதல், படுத்தல் என அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தையின் ஆரோக்கியத்திற்காக அவர்கள் இத்தகைய கட்டுப்பாடுகளையெல்லாம் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும். ஏனென்றால் கர்ப்ப காலத்தில் அவர்கள் உடம்பில் ஹார்மோன்கள் மாற்றம் அடையும். அதனால், அவர்கள் தங்கள் உடலுக்கு ஏற்ற உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். மருத்துவர் ஆலோசனையின் பேரில் சரியான உணவு முறையை பின்பற்ற வேண்டும். 

இப்படியான சூழலில் இப்போது பொங்கல் கொண்டாடப்படுகிறது. வீட்டில் இருக்கும் அனைவரும் கரும்பு சாப்பிடும்போது, கர்ப்பிணிகளுக்கும் கரும்பு சாப்பிடலாம் என்ற ஆசை இருக்கும். ஆனால், அவர்கள் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா? என்ற சந்தேகமும் எழ வாய்ப்புகள் உள்ளன. அப்படியான சந்தேகம் உங்களுக்கு இருந்தால், அதனை இங்கே தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். 

கர்ப்ப காலத்தில் கரும்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மலச்சிக்கலுக்கு தீர்வு 

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். இத்தகைய சிக்கலால் பெரும்பாலான பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அப்படியான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெண்கள் கரும்பு சாப்பிடலாம். ஏனென்றால் கரும்பில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது உங்களின் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும். 

மேலும் படிக்க | வயிற்றில் இந்த உணர்வுகள் இருக்கிறதா? கேன்சராக கூட இருக்கலாம்!

தொற்றுக்களை விரட்டும்

கரும்பில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டு இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு இது ஒரு சிறந்த நிவாரணியாகும். சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று, சிறுநீரக கற்கள் மற்றும் மஞ்சள் காமாலை ஆகிய வியாதிகளுக்கு இது ஒரு நல்ல மருந்தாகும். 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 

கர்ப்பிணி பெண்கள் மிகவும் பலவீனமாகவும் மற்றும் சோர்வாகவும் உணர்வார்கள். கரும்பு சாறு குடித்தால், உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், கல்லீரல் சிறப்பாக செயல்படும். பிலிருபின் சரியான அளவில் இருக்க உதவும். 

முக்கிய குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் கரும்பு அல்லது கரும்பு சாறு அதிகம் உட்கொள்ள கூடாது.  கரும்பு அல்லது கரும்பு சாறை பகலில் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள் மாலை நேரத்தில் எடுத்து கொண்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் உண்டாகும்.  உங்களுக்கு நீரிழிவு நோய் அல்லது கர்ப்ப கால நீரிழிவு நோய் இருந்தால் கண்டிப்பாக கரும்பு உட்கொள்ள கூடாது.

கருச்சிதைவை உண்டாக்குமா?
 
கரும்பு சாறு ஒரு போதும் கருச்சிதைவை உண்டாக்காது. ஆனால் கர்ப்ப கால நீரிழிவு நோய் உள்ளவர்கள், கரும்புச்சாறை தவிர்க்க வேண்டும். இந்த பானம் இரத்தத்தில் உள்ள குளூகோஸ் அளவை அதிகரித்து, கர்ப்ப கால சிக்கல்களான குறைபிரசவம் போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தி விடும்.

மேலும் படிக்க | சர்க்கரை பொங்கல் சாப்பிட்டால் சுகர் அதிகமாகுமா... உண்மை என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News