Health Tips: ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் தவறான வாழ்க்கை முறை காரணமாக அதிக கொலஸ்ட்ரால் சேரும் வாய்ப்பு உள்ளது. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, அது நரம்புகளில் படிந்து, அதனால் மாரடைப்பு மற்றும் இன்னும் பல நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளது. மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு அதிக கொலஸ்ட்ரால் மிகப்பெரிய காரணமாக கருதப்படுகிறது. உடலில் இரண்டு வகையான கொழுப்புகள் உள்ளன - ஒன்று உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL), மற்றொன்று குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL). HDL கொழுப்பு நல்ல கொழுப்பாகும், LDL கெட்ட கொழுப்பு. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் நிலை ஹை கொலஸ்ட்ரால் என அழைக்கப்படுகின்றது. இந்த கொலஸ்ட்ரால் இரத்தத்தில் அதிகரிக்கும் போது, அது நமது தமனிகளில் அடைப்பை ஏற்படுத்துகிறது. சில எளிய வீட்டு வைத்தியங்கள் (Home Remedies) மூலம் கெட்ட கொழுப்பை கரைக்க முடியும். அவற்றில் ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கொத்தமல்லியின் ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits of Coriander)
பச்சை கொத்தமல்லி உணவில் நறுமணத்தை அதிகரிக்கிறது. இது மட்டுமல்லாமல், இது ரசம், காய்கறிகள், சூப், சாம்பார் என பல வித உணவு வகைகளின் சுவையையும் மேன்படுத்துகிறது. சுவை, மணம் மட்டுமின்றி இதில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. கொலஸ்ட்ராலை நீக்கும் குணம் கொத்தமல்லி இலையில் உள்ளது.இதுமட்டுமின்றி வேகமாக அதிகரிக்கும் உடல் எடையையும் இய்து கட்டுப்படுத்தும். கொத்தமல்லியால் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கொத்தமல்லி கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது
பச்சை கொத்தமல்லி இலைகளில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த இலைகளை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் (Home Remedy For Cholesterol) வைக்கலாம். கெட்ட கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும் போது, உடல் பருமன் (Home Remedy For Weight Loss) அதிகமாவதில்லை. இது தவிர, இதயம் தொடர்பான அபாயங்களும் குறையும்.
மேலும் படிக்க | Kidney Detox: சிறுநீரகத்தை இயற்கையாக சுத்தம் செய்யும் ‘சூப்பர்’ உணவுகள்!
செரிமானத்தில் நன்மை பயக்கும்
கொத்தமல்லி இலையில் காணப்படும் செரிமான (Digestion) நொதிகள் வயிறு தொடர்பான நோய்களைக் குறைக்கின்றன. இது அஜீரணம், வாயு, அமிலத்தன்மை, எரியும் உணர்வு மற்றும் வயிற்றில் வீக்கம் போன்ற பிரச்சனைகளை நீக்கி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
கொத்தமல்லி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது
ஒரு ஆய்வின் படி, குர்செடின் மற்றும் டோகோபெரோல் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கொத்தமல்லி இலைகளில் காணப்படுகின்றன. இதன் உதவியுடன் புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம். இது தவிர, கொத்தமல்லி இலைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை (Home Remedy For Immunity) வலுப்படுத்தும் நரம்பியல் விளைவுகளையும் கொண்டுள்ளது.
நீரிழிவு நோய்க்கு கொத்தமல்லி
கொத்தமல்லி இன்சுலின் செயல்திறனை அதிகரிக்கிறது. இது உடலில் இரத்த சர்க்கரையை (Home Remedy For Diabetes) கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் இலைகளில் காணப்படும் சாற்றின் உதவியுடன், உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை சமநிலைப்படுத்துவது மிகவும் எளிதானது.
சிறுநீரக பிரச்சனை
சிறுநீரகத்தை சுத்தப்படுத்த சில இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம். கொத்தமல்லி சிறுநீரக நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. கொத்தமல்லியில் ஆண்டிமைக்ரோபையல், ஆண்டிடிரஸன், ஆண்டிமூட்டஜெனிக், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த பண்புகள் சிறுநீரக செயல்பாட்டிற்கு பயன்படுகிறன. சிறுநீரக கற்கள் (Home Remedy For Kidney Stones) உட்பட அனைத்து சிறுநீரக பிரச்சனைகளையும் கொத்தமல்லி களைகிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாத... கருவின் வளர்ச்சியை பாதிக்கும் ‘சில’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ