அறிவியல் ஆராய்ச்சிகள் நாள்தோறும் ஆச்சரியங்களை ஏற்படுத்துகின்றன. அதில் ஒன்று தான், ஒரேயொரு ரத்த பரிசோதனையில் 50 க்கும் மேற்பட்ட புற்றுநோய்களைக் கண்டறிய முடியும் என்ற செய்தி. எளிய ரத்த பரிசோதனை ஒன்றை செய்தால், அறிகுறிகளை காட்டுவதற்கு முன்னரே பல புற்றுநோய்களை கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கிரெயில், இன்க். (GRAIL, Inc. (California, USA),), என்ற நிறுவனம் ஆராய்ச்சியை மேற்கொண்டது. தற்போது, இந்த ரத்த பரிசோதனை அமெரிக்காவில் மட்டும் பரிந்துரைக்கப்படுகிறது. மார்பகம், கர்ப்பப்பை வாய், புரோஸ்டேட், நுரையீரல் மற்றும் குடல் புற்றுநோய்களை கண்டறிய இந்த பரிசோதனை அமெரிக்காவில் மேற்கொள்ளப்படுகிறது.
மொத்தத்தில், 134,000 க்கும் மேற்பட்ட நபர்கள் கிரெயிலின் ரத்த பரிசோதனை ஆய்வுகளில் பங்கேற்றுள்ளனர். இந்த ரத்தப் பரிசோதனையில் புற்றுநோய் உடலின் எந்த இடத்தில் உருவாகியிருக்கிறது என்பதையும் காட்டுகிறது.
Also Read | தியானம் செய்யும்போது தூக்கம் வர என்ன காரணம்?
இது நோயறிதல் மற்றும் கவனிப்புக்கான அடுத்த படிகளை தீர்மானிக்க உதவியாக இருக்கும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த ரத்தப் பரிசோதனையில் கண்டறியக்கூடிய பல புற்றுநோய்களில் கல்லீரல், கணையம் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய் உள்ளிட்ட பலவகை புற்றுநோய்கள் ஆபத்தானவை.
ஆனால் இவற்றை கண்டறிய பரிசோதனைகள் இல்லை, இவற்றை, நோயின் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அது நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதில் உதவியாக இருக்கும்.
Also Read | மனோரீதியான பாதிப்பை குறைக்கும் யோகா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR