இன்றைய வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கங்களினால் பாலியல் பிரச்சனைகளால் பலர் சிக்கலகளை சந்திப்பதை பார்க்க முடிகிறது. இதனை சமாளிக்க ஏராளமான மக்கள் வயாக்ராவையும் நாடுகிறார்கள். இது பல பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது. அதன்படி நீங்கள் பாலியல் பிரச்சனையால் சிக்கித் தவித்தால் மாதுளையின் உதவியையும் எடுத்துக் கொள்ளலாம்.
பொதுவாக தினமும் மாதுளை சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருக்கலாம். ஆனால், நீங்கள் மாதுளையை எப்போது, எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம். எனவே மாதுளை எப்போது சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம், அதனால் உங்கள் செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான பாராசிட்டமால் மருந்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்!
இரவில் ஒரு கிண்ணம் மாதுளை
ஆண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு சில குறிப்பிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மிகவும் முக்கியம். இந்நிலையில், இரவில் தூங்கும் முன் ஒரு கிண்ணம் மாதுளை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது . இது கருவுறுதல் மற்றும் பாலியல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. அத்துடன் மாதுளையில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன, அவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. அதாவது, உங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த விரும்பினால், இரவில் தூங்கும் முன் ஒரு கிண்ணம் மாதுளை சாப்பிட வேண்டும்.
இஞ்சியும் இதற்கு தீர்வாகும்
இது தவிர இஞ்சியையும் சாப்பிடலாம். இதை சாப்பிடுவதன் மூலம் உங்கள் பல பிரச்சனைகள் தீரும். உங்கள் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் சக்தி இதற்கு இருப்பதாக நம்பப்படுகிறது. உங்கள் உடலில் பாலுணர்வை அதிகரிக்க டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் செயல்படுகிறது. எனவே இது சாதாரண செக்ஸ் வாழ்க்கைக்கு அவசியமான ஹார்மோன் ஆகும். இது தவிர, பச்சை வெங்காயமும் உங்களுக்கு நன்மை பயக்கும். எனவே இன்றே உங்கள் உணவில் இந்த விஷயங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த விஷயங்களைச் சேர்த்த பிறகு, நீங்கள் வயாக்ராவை மறந்துவிடுவீர்கள்.
வாழைப்பழம் சாப்பிட்டால் பலவீனம் நீங்கும்
பெரும்பாலான சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஆண்கள் தங்களின் கருவுறுதலை அதிகரிக்க விரும்பினால், இன்றிலிருந்து தினமும் ஒரு வாழைப்பழத்தையாவது சாப்பிடலாம். இதன் மூலம், உடலில் உள்ள அனைத்து பலவீனங்களும் நீங்கி, புதிய ஆற்றல் கிடைப்பதுடன், கருவுறுதலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR