வாழ்வில் விட்டுக்கொடுக்க கூடாத 2 விஷயங்கள்! நயன்தாரா எதை சொல்கிறார் பாருங்க..

Nayanthara : நடிகை நயன்தாரா சமீபத்தில் ஃபெமி 9 விழாவில் கலந்து கொண்டார். இதில் இவர் பேசிய விஷயங்கள் வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Jan 10, 2025, 07:39 PM IST
  • மதுரையில் நடந்த ஃபெமி 9 நிகழ்ச்சி!
  • நயன்தாரா சொன்ன விஷயம்..
  • இந்த 2 விஷயங்களை விட்டுக்கொடுக்க கூடாதாம்!!
வாழ்வில் விட்டுக்கொடுக்க கூடாத 2 விஷயங்கள்! நயன்தாரா எதை சொல்கிறார் பாருங்க.. title=

Nayanthara : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருபவர், நடிகை நயன்தாரா. இவர், தமிழில் நடிகையாக இருப்பதோடு மட்டுமன்றி, சமீபத்தில் பெண்களுக்கான ப்யூட்டி ஸ்கின் கேர் பிராண்ட் ஒன்றை தொடங்கி அதை நடத்தி வருகிறார். இது குறித்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் பேசிய விஷயங்கள்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நயன்தாராவின் பேச்சு..

யார் நம்மை கீழ்த்தரமாக பேசினாலும் நம்மிடம் தவறாக நடந்து கொண்டாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நேர்மையாக உழைத்தால் வாழ்க்கையில் வெற்றி காணலாம் என மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா பேசியிருக்கிறார். 

பெமி 9 நாப்கின் நிறுவனத்தின் 2025ம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வு மற்றும் விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா பங்கேற்று விற்பனையை அதிகரித்த முகவர்களுக்கான பரிசுகளை வழங்கினார்.

விட்டுக்கொடுக்க கூடாத 2 விஷயங்கள்!

“நான் எப்போதும் வாழ்வில் நம்புகிற இரண்டு விஷயங்கள் உண்டு. அது, தன்னம்பிக்கையும் சுயமரியாதையும். இது இருந்தால்போதும் எவ்வளவு நடந்தாலும் யார் நம்மை கீழே இறக்க நினைத்தாலும் இந்த இரண்டு விஷயங்களை விட்டுவிடக்கூடாது.

இதை நாம் கடைபிடித்தால் வாழ்க்கை அழகாக மாறிவிடும்நமக்கு நம்மேல் தன்னம்பிக்கையும், மரியாதையும் இருந்தால் அதற்கு மேல் வேறு எந்த விஷயமும் கிடையாது.இந்த தன்னம்பிக்கை நம்முடைய வரவேண்டும் என்றால் நேர்மையாக உழைக்க வேண்டும் காலையில் எழுந்தவுடன் யார் என்ன சொன்னாலும், நம்மளை எவ்வளவு கீழ்த்தரமாக பேசினாலும்நம்மிடம் தவறாக நடந்து கொண்டாலும் நாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உண்மையாக தொடர்ந்து உழைக்க வேண்டும்அப்போதுதான் நமக்கு தன்னம்பிக்கை வரும். இதன் மூலம் நமது வாழ்க்கையே மாறிவிடும் உண்மையும் உழைப்பும் உயிர் இருக்கும் வரை இருந்தால் நமது வாழ்க்கை வெற்றிகரமாக அமையும் என்றார். நிகழ்ச்சியில் நயன்தாராவின் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டார்.

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க நயன்தாரா ‘இதை’ குடிப்பாராம்! என்ன தெரியுமா?

மேலும் படிக்க | தனுஷை மறைமுகமாக தாக்கிய நயன்தாரா?! இன்ஸ்டாவில் போட்ட பதிவு..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News