Tirupati Stampede | திருப்பதி இலவச டிக்கெட்டால் கூட்ட நெரிசல் -தமிழக பெண் உள்பட 6 பேர் பலி

Tirupati Stampede Latest News Updates: திருப்பதியில் சொர்க்கவாசல் நிகழ்ச்சிக்கு இலவச டிக்கெட் வாங்குவதற்கு, அதிகளவு கூடிய கூட்டத்தில் சிக்கி மொத்தம் 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் சேலத்தை சேர்ந்த மல்லிகா என்பவரும் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jan 9, 2025, 09:48 AM IST
  • ஒரே வரிசையில் 30 ஆயிரம் பேர் நின்றதாக தகவல்.
  • ஜன.10ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்புக்கான டிக்கெட் விற்பனை.
  • டிக்கெட்டை வாங்க முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Tirupati Stampede | திருப்பதி இலவச டிக்கெட்டால் கூட்ட நெரிசல் -தமிழக பெண் உள்பட 6 பேர் பலி title=

Tirupati Stampede Today News: திருப்பதியில் சொர்க்கவாசல் நிகழ்ச்சிக்கு இலவச டிக்கெட் வாங்குவதற்கு, அதிகளவு கூடிய கூட்டத்தில் சிக்கி மொத்தம் 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 20-25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 

அதில் சேலத்தை சேர்ந்த மல்லிகா என்பவரும் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 30 ஆயிரம் பேர் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், மேலும் சிலர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஒரே வரிசையில் 30 ஆயிரம் பேர்...!

திருப்பதியின் விஷ்ணு நிவாஸம் பகுதியில் இலவச டிக்கெட் விநியோகம் இன்றிரவு நடந்தது. இதனை வாங்க அங்கு அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியுள்ளது. மேலும், ஒரே வரிசையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நின்றதால், மக்கள் டிக்கெட்டை வாங்க முண்டியடித்த காரணத்தால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது, சுமார் 25 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க | 2025 மகாகும்பமேளாவில் கலந்து கொள்ளும்... ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி... லாரன் பவல் ஜாப்ஸ்

போலீசார் குவிப்பு

காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த ரூயா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கிருந்து சில வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளன. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிந்தது. அவர்கள் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது.

திருப்பதியில் இதுபோன்ற இலவச தரிசனத்திற்கு அதிகளவு கூட்டம் கூடும். இருப்பினும் நூற்றுக்கணக்கில் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு குவிக்கப்பட்டிருப்பார்கள். ஜன.10ஆம் தேதி திருப்பதியில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கான இலவச டிக்கெட் விற்பனையே இன்று விநியோகிக்கப்பட்டது.

திருப்பதி வருகிறார் முதல்வர் சந்திரபாபு நாயுடு

திருப்பதியில் நடந்த இந்த கொடூர கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி அடைந்ததாகவும், உடனடியாக அவர் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை தொடர்புகொண்டு சம்பவத்தின் தற்போதைய நிலை குறித்து விசாரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை காலை 10.30 மணிக்கு திருப்பதிக்கு வரும் முதலமைச்சர் சந்திரபாபு, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குச் சென்று சந்திக்க இருக்கிறார். 

மேலும் படிக்க | சாலை விபத்து... பணம் இல்லாமல் சிகிச்சை பெற மத்திய அரசு கொண்டுவரப்போகும் சூப்பர் திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News