எச்சரிக்கை! மனிதர்களை வேட்டையாட முதலைகளின் புது டெக்னிக் - வைரல் வீடியோ உண்மையா?

crocodile video | தண்ணீருக்குள் மனிதர்களை வரவழைக்க முதலைகள் கடைபிடிக்கும் புது டெக்னிக் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ உண்மையா? பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 11, 2025, 12:46 PM IST
  • தண்ணீருக்குள் சைகை காட்டும் முதலை
  • மனிதர்களுக்கு வலை விரிக்கும் முதலை தந்திரம்
  • வைரல் வீடியோவின் உண்மை பின்னணி என்ன?
எச்சரிக்கை! மனிதர்களை வேட்டையாட முதலைகளின் புது டெக்னிக் - வைரல் வீடியோ உண்மையா? title=

crocodile Viral video | மாமிச உண்ணியான முதலைகள் இப்போது இரையை பிடிக்க புது டெக்னிக்கை கடைபிடிக்க தொடங்கிவிட்டன. மனிதர்களை தண்ணீருக்குள் வரவழைத்து வேட்டையாடுவதற்காக புதிய சைகையை காட்ட தொடங்கியுள்ளன. இந்த சைகையை பார்த்து ஏமாந்து தண்ணீருக்குள் செல்பவர்கள் முதலைக்கு இரையாக நேரிடும். அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்ததாக இருக்கிறது இந்த தகவல். முதலைகள் எப்படி இதை செய்கின்றன என்ற கேள்வி இந்த வீடியோ வைரலான பிறகு எல்லோரும் கேட்க தொடங்கினர். முதலையின் புது தந்திரம் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் முதலைகளுடன் இருக்கும் நிபுணர்கள் மனிதர்களை அழைப்பதற்காக முதலைகள் தண்ணீருக்குள் தங்களின் கைகளை சைகையாக காட்டுவதாக கூறுவதை ஏற்கவில்லை.

முதலை வீடியோவின் உண்மை என்ன?

இப்போது வைரலாகியிருக்கும் வீடியோவில், தண்ணீருக்குள் முதலை ஒன்று மூழ்கியவாறு தன்னுடைய கைகளை மட்டும் மேலே உயர்த்தி சைகை செய்கிறது. மனிதர்களை அழைப்பதற்காக முதலை செய்யும் தந்திரம் என கூறுகிறார்கள். தொலைவில் இருந்து பார்ப்பவர்கள் யாரோ ஒருவர் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டார்கள் என நினைத்து அவர்களைப் காப்பாற்ற செல்ல வாய்ப்பு இருக்கிறது. அப்போது, உண்மையில் அங்கு மனிதர்கள் இருக்கமாட்டார்கள், மாறாக முதலை இருந்து அங்கு செல்லும் மனிதர்களை வேட்டையாடிவிடும். அந்த வீடியோவுக்கு இப்படியொரு விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார்கள். வீடியோவை பார்க்கும் எல்லோருக்கும் முதலை தண்ணீருக்குள் செய்யும் செய்கை, யாரோ ஒருவர் அழைப்பது போல் தான் தோன்றும்.

முதலை வீடியோவுக்கு நிபுணர்கள் மறுப்பு

ஆனால் முதலை நிபுணர்கள் இப்படி தந்திரமாக முதலை செய்யும் என்பதை நாங்கள் நம்பவில்லை என கூறியுள்ளனர். அது இரையை வாயில் வைத்திருக்கும் நேரத்தில் கைகளை தண்ணீருக்கு மேலே உயர்த்த வாய்ப்பு இருக்கிறது. இன்னொன்று முதலையின் நரம்பியல் செயல்பாடுகளாக கூட இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். பொதுவாக உப்புநீர் முதலைகள் இப்படி செய்யும். அவற்றின் தாடைகளின் உணவு இருக்கும்போது அவை இப்படி செய்ய அதிகம் வாய்ப்பு இருக்கிறது என கூறியுள்ளனர்.

இந்தோனேஷியா முதலை

இப்போது வைரலாகியிருக்கும் வீடியோ இந்தோனேஷியாவில் எடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்தோனேஷியாவை விட ஆஸ்திரேலியாவில் தான் அதிக முதலைகள் இருக்கின்றன என முதலை நிபுணர்கள் கூறியுள்ளனர். அதேநேரத்தில் உப்பு நீர் முதலைகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். ஆண்டுக்கு 100க்கும் மேற்பட்டோர் உப்பு நீர் முதலையின் வேட்டையில் சிக்கிக் கொள்வதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். சிலர் முதலையின் இந்த செயலுக்கு கற்பிக்கப்படும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் விளக்கமளித்துள்ளனர்.

மேலும் படிக்க | ஒரே வீடியோவில் ஃபேமஸான “க்ளூக்ளோஸ் பொடி” சிறுவன்! வைரல் ரீல்..

மேலும் படிக்க | “டேய் மச்சான்..வாடா விளையாடலாம்” உறங்கிய நாயை எழுப்பிய குரங்கு! வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News