White Rice Benefits Tamil | இந்தியாவில் வெள்ளை சாப்பாடு பிரதானம். ஒருநாள் ஒருவேளையாவது அரிசி உணவை எடுத்துக் கொள்பவர்கள் எண்ணிக்கை தான் அதிகம். கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் அதிகம் உட்கொள்ளப்படும் உணவாக அரசி இருக்கிறது. அந்த அரசியை பயன்படுத்தி வெள்ளை சாதம் தவிர, பிரைடு ரைஸ், பிரியாணி, இட்லி, தோசை போன்ற வகையான உணவுகளும் தயாரிக்கப்படுகின்றன. இன்றும் ஒருவேளை உணவாக சோறு சாப்பிடாமல் பலரின் உள்ளம் திருப்தியடைவதில்லை. ஆனால், ஒரு மாதம் வெள்ளை சாதம் சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும் என்று சிந்தித்து இருக்கிறீர்களா?. இந்தக் கேள்விக்கான பதிலை இங்கே பார்க்கலாம்.
30 நாட்கள் வெள்ளை சாதம் சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும்?
உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் இது குறித்து கொடுத்துள்ள விளக்கத்தில், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வெள்ளை அரிசியில் காணப்படுகின்றன. இது ஊட்டச்சத்துக் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமானது. ஒரு மாதத்திற்கு வெள்ளை அரிசி இல்லாமல் இருப்பது உங்கள் உடலில் பல முக்கிய ஊட்டச்சத்துக்களில் குறைபாட்டை ஏற்படுத்தும். பலவீனம், சோம்பல் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
எடை குறையும்
பலர் உடல் எடையை குறைக்க இந்த முறையை முயற்சி செய்கிறார்கள். அதற்காக அவர்கள் எடுக்கும் முதல் முடிவு, வெள்ளை அரிசி சாப்பிடக்கூடாது என்பது தான். வெள்ளை அரிசியில் நல்ல அளவு கார்போஹைட்ரேட் உள்ளது, இது நம் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. இதை ஒரு மாதம் சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையலாம். ஆனால் உடல் மந்தமாகிவிடும்.
செரிமானத்தில் சிரமம்
வெள்ளை அரிசி நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும், இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அவை இல்லாமல், மலச்சிக்கல், வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்
வெள்ளை அரிசி நமது உணவுப் பழக்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும், அது இல்லாமல் நம் உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இதில் நமது உடலுக்கு குறைவான ஊட்டச்சத்து, உடல் பலவீனமடைதல் மற்றும் செரிமான பிரச்சினைகள் ஆகியவை அடங்கும். எனவே, நமது தேவைக்கேற்ப அரிசியின் அளவை முடிவு செய்ய வேண்டும், ஆனால் அதை முழுவதுமாக விட்டுவிடுவது புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்காது.
வெள்ளை அரிசி யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
பொதுவாக நீரிழி நோய் பாதிப்பில் உள்ளவர்கள் வெள்ளை அரிசி உணவை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. வெள்ளை அரிசியில் இருக்கும் அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகளை ஜீரணிக்க அதிக இன்சுலின் சுரக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே இன்சுலின் சுரப்பில் மாற்றம் உள்ளதால் தான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கூடுதலாக இந்த உணவை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது நோயின் தீவிரம் உடலை மேலும் மோசமாக்கும். மருத்துவர்கள் கூட நீரிழிவு நோய் பாதிப்பில் உள்ளவர்களுக்கு அரிசி உணவை தவிர்க்குமாறு அல்லது குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்கள். இதுதவிர, உடல் எடையை குறைப்பவர்கள் அரிசி உணவை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இந்த உணவை சாப்பிடவில்லை என்றால், இந்த உணவால் கிடைக்ககூடிய சத்துகளை உடலுக்கு ஈடு செய்யக்கூடிய மாற்று உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது எந்த பிரச்சனையும் இல்லை.
மருத்துவர் ஆலோசனை
நீங்கள் உங்கள் உணவில் எந்தவொரு மாற்றம் செய்வதற்கு முன்பும் நிபுணரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றால், பரிசோதனை முயற்சியாக உணவு முறை மாற்றம் செய்வதில் தவறில்லை. அதுவே, நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருப்பவர்கள் உணவுமுறை எந்தவொரு மாற்றம் செய்ய நினைத்தாலும் மருத்துவர்களின் ஆலோசனை கண்டிப்பாக அவசியம். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் சுலபமான வீட்டு வைத்தியங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ