Urinary Tract Infection: பெரும்பாலும் அனைவரது வீடுகளிலும் குளிர்சாதன பெட்டி உள்ளது. காய்கள், பழங்கள், விரைவில் கெட்டுப்போகும் சில உணவுப்பொருட்களை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கவும், பொருட்களை குளிர்ச்சியாக வைக்கவும் இது பயன்படுகிறது. ஆனால், இதற்கும் UTI அதாவது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கும் தொடர்பு உள்ளது என்று கூறினால் அதை நம்ப முடியுமா? ஆனால் அது உண்மை. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
UTI எனப்படும் சிறுநீர் பாதை நோய்த்தொற்று எந்த வயதிலும் ஏற்படக்கூடிய ஒரு உடல்நலப் பிரச்சனையாகும். இது ஒரு வகை சிறுநீர் தொற்று. இது சிறுநீர் அமைப்பில் ஏற்படுகிறது. சிறுநீர் கழிக்கும் போது வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் சிறுநீரில் இரத்தம் போன்ற பிரச்சனைகள் இதன் அறிகுறிகளாக கருதப்படுகின்றன.
இந்த நோய் பொதுவாக எசெரிச்சியா கோலை (ஈ. கோலை) சிறுநீர்க்குழாயில் இருந்து சிறுநீர் பாதையில் நுழையும் போது ஏற்படுகிறது. சமீபத்தில், ஒரு புதிய ஆய்வில் வீட்டில் வைக்கப்படும் குளிர்சாதனப் பெட்டிகள் UTI ஐ ஏற்படுத்தும் என்று கூறப்படுள்ளது. இந்தக் கூற்று எவ்வளவு உண்மை? குளிர்சாதனப் பெட்டிக்கும் UTI -க்கும் என்ன தொடர்பு? இதை பற்றி இங்கே விரிவாகக் காணலாம்.
குளிர்சாதனப் பெட்டி UTIயை ஏற்படுத்துமா?
குளிர்சாதனப் பெட்டிகளில் சேமிக்கப்படும் அசுத்தமான அல்லது வேகவைக்கப்படாத இறைச்சியில் ஏற்படும் ஈ.கோலை சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்க ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒன் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், குளிர்சாதனப் பெட்டிகளில் சேமிக்கப்படும் பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகள் UTI களை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் முதல் வெயிட்லாஸ் வரை... ஆரோக்கியத்திற்கு வரமாகும் பாசிப்பயறு...
குளிர்சாதனப் பெட்டிகளில் காணப்படும் E. coli மற்றும் க்ளெப்சியெல்லா போன்ற பாக்டீரியாக்கள் புரதம் தொடர்பான UTI களுக்கு முக்கியமாக காரணமாக இருக்கலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் UTI களுக்கு இடையிலான தொடர்பு சரியாக விளக்கப்படவில்லை. ஆகையால் இதில் இன்னும் அதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?
அசுத்தமான இறைச்சியில் இருந்து ஈ.கோலை பாக்டீரியா சிறுநீர் பாதையில் ஊடுருவி, தொற்றுநோயை ஏற்படுத்தும் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதைத் தவிர்க்க, இறைச்சியை முறையாகக் கையாள்வது அவசியம் என்றும், அதை சமைப்பதும் அவசியம் என்றும் ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நோயைத் தவிர்க்க, உங்கள் உணவு முறையும் சரியாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
UTI ஐ தவிர்க்க விரும்பினால் குளிர்சாதன பெட்டியை இப்படி சுத்தமாக வைக்கலாம்
- உங்கள் குளிர்சாதன பெட்டியை தவறாமல் சுத்தம் செய்து, அதில் சேரும் பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகளை அகற்றவும்.
- உணவுகளை குளிர்சாதன பெட்டியில் சரியாக சேமித்து மூடி வைக்கவும்.
- குளிர்சாதன பெட்டியின் வெப்பநிலையை கட்டுப்படுத்தவும், அதை 4°C க்கு கீழே வைக்கவும்.
- பிரிட்ஜை அவ்வப்போது சோதித்து, ஏதேனும் பிரச்சனை இருந்தால் சரி செய்து கொள்ளுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ