தீபாவளியின் போது, பட்டாசுகளில் இருந்து வெளிவரும் நச்சுப் புகைகள் காற்றில் உள்ள மாசை அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேல் உயர்த்தி, சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அபாயத்தை அதிகரிக்கும்.
தீபங்களின் திருவிழாவான தீபாவளி, தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியை குறிக்கிறது. ஆனால், நன்மையின் வெற்றியைக் கொண்டாட வெடிக்கும் பட்டாசுகள், சுற்றுசூழலில் மாசை அதிகரித்துவிடுகிறது. சுற்றுச்சூழலில் அதிகரிக்கும் மாசின் தீமைகளை தவிர்க்க வேண்டுமானால் 'பசுமை தீபாவளி'யை அனுசரிக்கவேண்டும்.
குறிப்பாக ஆஸ்துமா மற்றும் பிற சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தீபாவளி சிக்கலை ஏற்படுத்தும். பட்டாசுகளிலிருந்து வெளிவரும் நச்சுப் புகைகள் காற்று மாசை அதிகரிக்கும்.
தீபாவளி பண்டிகையின் போது காற்று மாசு அளவுகள் அதிகரிக்கும் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Also Read | ஒரு பழத்தின் விலை இவ்வளவா? 50 பவுன் நகையே வாங்கிடலாமே?
ஃபோர்டிஸ் மருத்துவமனையின் நுரையீரல் நிபுணரும் தூக்க மருத்துவ நிபுணருமான டாக்டர் அன்ஷு பஞ்சாபியின் அறிவுரை இது…
வெளியே செல்வதை தவிர்க்கவும்
வெளியே செல்வதையும் பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்கவும். பட்டாசுகளில் இருந்து வெளியாகும் புகையில் கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைடு போன்ற தீங்கு விளைவிக்கும் அம்சங்கள் உள்ளன. இந்த தீங்கு விளைவிக்கும் பொருட்கள் ஆஸ்துமா பாதிப்பை அதிகமாக்கும். எனவே உங்கள் அறைக்குள் புகை வராதவாறு மூடி வைக்கவும்.
முகக்கவசம் அணியுங்கள்
கொரோனா தொற்றுக்காக மட்டும் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை. மாசு எதிர்ப்பு முகக்கவசங்களும் கிடைக்கின்றன. இவற்றை அணிந்தால், புகைகள் சுவாசக் குழாய்க்குள் நுழைவதைத் தடுக்கலாம்.
சுவையான உணவு மற்றும் இனிப்புகளுக்கு பெயர் பெற்ற தீபாவளி பண்டிகையில், வீட்டில் பலகாரங்கள் பலவிதமாக இருந்தாலும், எண்ணெயில் பொறித்த, வறுத்த உணவுகளையும் இனிப்புப் பண்டங்களையும் தவிர்க்கவும்.
Also Read | உங்கள் அடுப்பங்கரையில் இருக்கும் இயற்கையான வயகரா
பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய ஊட்டச்சத்து உணவை உண்ணுங்கள். இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். உடலில் நீர்ச்சத்து குறைபாடு குறையாமல் இருக்கவும், உடலில் அதிக அமிலத்தன்மை ஏற்படாமல் தடுக்கவும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன், ஒரு குவளை வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும். இது செரிமானத்தை சீர்படுத்துவதோடு, சுவாச மண்டலத்தையும் சீராக்கும்.
சுவாசக் கோளாறுகளால் அவதிப்படுபவர்கள், தீபாவளி காலத்தில், தங்கள் மருந்துகள், நெபுலைசர்கள் மற்றும் பிற அவசரகால மருந்துகளை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். அதேபோல், மருத்துவர்கள் பரிந்துரைத்த அனைத்து மருந்துகளையும் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கு அல்லது தொண்டையில் எரிச்சல் இருந்தால், உடனடியாக ஆவி பிடிக்கவும். தீபாவளிக்கு முன்பு வீட்டை சுத்தம் செய்வது மங்களகரமானது என்றாலும், ஆஸ்துமா இருப்பவர்கள் இந்த வேலையை செய்யவேண்டாம். தூசி சுவாச பிரச்சனைகளை அதிகரிக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
இவற்றை எல்லாம் கவனமாக கடைபிடித்தால், ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களும், நிம்மதியாக தீபாவளியை கொண்டாடி மகிழலாம்.
ALSO READ | Health Alert! வந்துக் கொண்டேயிருக்கிறது கொரோனாவை விட ஆபத்தான வைரஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR