Symptoms of Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 குறைபாட்டினை அலட்சியமாக எண்ண வேண்டாம். உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் வைட்டமின் பி12 அடங்கும். இதன் குறைபாடு நரம்பு மண்டலத்தை பாதிப்பதோடு, பல தீவிர உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். நரம்பு மண்டலம் சீராக செயல்படுவதோடு மட்டுமல்லாமல், மூளை வளர்ச்சி, முதுகுத்தண்டு வளர்ச்சி, டிஎன்ஏ, ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி ஆகியவற்றிற்கும் வைட்டமின் பி12 அவசியம்.
சயனோகோபாலமின் என்னும் வைட்டமின் பி12 ஊட்டச்சத்து நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்து. இதன் குறைபாடு, உடலை சல்லடையாக குறைத்து விடும் என்றால் மிகையில்லை. இந்நிலையில், வைட்டமின் பி12 குறைபாட்டினை உணர்த்தும் அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம்.
அதீத சோர்வு (Tiredness)
வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால், உடலில் ரத்த உற்பத்தி குறைந்து ரத்தசோகை ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதனால் உடலில் அதீத சோர்வு மற்றும் பலவீனம் இருக்கும். எனவே காரணம் இல்லாமல், உடலில் சோர்வு அல்லது பலவீனம் இருந்தால், எச்சரிக்கையாக இருக்கவும்.
நடக்கும்போது உடல் சமநிலை இழத்தல் (Losing Balance While Walking)
வைட்டமின் பி12 குறைபாடு நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதால், நடக்கும் போது உடல் இயக்கத்தை ஒருங்கிணைக்க முடியாமல், தடுமாறி சமநிலை இழக்கும் நிலை ஏற்படுகிறது. அதோடு நரம்பு மண்டல பாதிப்பினால், கைகால்களில் உணர்வின்மை ஏற்பட்டு, அதனாலும் நடப்பதில், பிற வேலைகளை செய்வதில் தடுமாற்றங்கள் இருக்கலாம்.
பசியின்மை (Lack of Appetite)
பசியின்மையும் வைட்டமின் பி12 குறைபாட்டின் ஒரு அறிகுறியாகும். இதன் குறைபாடு அஜீரண பிரச்சனைகளை ஏற்படுத்தி, செரிமான உறுப்புகளை பலவீனப்படுத்துவதால் பசியின்மை ஏற்படுகிறது. இதன் காரணமாக சரியாக சாப்பிடாமல் போகும் நிலை ஏற்படுவதால், உடலில் பலகீனம் மற்றும் சோர்வு அதிகரிக்கும். எனவே இந்தப் பிரச்சினையை அலட்சியமாக எண்ணக்கூடாது.
மன அழுத்தம் (Mental Stress)
விட்டமின் பி12 குறைபாடு நரம்பு மண்டலத்தை மட்டும் இன்றி, மூளை ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதால், மன ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால் மன அழுத்தம் மட்டும் இன்றி, மனச்சோர்வு மனப்பதற்றம் ஆகியவை அதிகரிக்கும். வைட்டமின் பி12 குறைபாடு பல காலங்களுக்கு நீடித்தால், மூளையின் செயல் திறனை அது பெரிதும் பாதிக்கும்.
வைட்டமின் பி12 நிறைந்த சில உணவுகள் (Foods Rich in Vitamin B12)
மருத்துவ மொழியில், சயனோ கோபாலமின் என அழைக்கப்படும் வைட்டமின் பி12 ஊட்டச்சத்தினை உடல் உற்பத்தி செய்யாது என்பதால், உணவின் மூலம் மட்டுமே, வைட்டமின் பி12 சத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. காளான்கள், ப்ரோக்கோலி, பால் தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள், சோயா பால், முட்டை, இறைச்சி மற்றும் மீன் உணவுகளில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | வெள்ளை முடியை கருப்பாக்கும் தேங்காய் எண்ணெய், எலுமிச்சை, மருதாணி - எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ