கண்களை பாதிக்கும் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்... தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை

பெரும்பான்மையான நேரம், கணிப்பொறி திரையை பார்ப்பதன் மூலம் கண்ணுக்கு ஓயாமல் வேலை கொடுப்பதால், கம்ப்யூட்டர் விஷன் சென்றோம் என்னும் பாதிப்பு அதிகம் உள்ளதாக கண் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். இதனை டிஜிட்டல் ஸ்ட்ரைன் (Digital Strain) எனவும் அழைப்பார்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 25, 2024, 07:36 PM IST
  • கண் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருக்க எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள்.
  • கம்ப்யூட்டர் திரைக்கு பக்கவாட்டில் இருந்து வெளிச்சம் வரும்படி இருப்பது நல்லது.
  • குறைவான வெளிச்சத்தில் மொபைல் திரை பார்ப்பது, கண்களை மிக அதிக அளவில் பாதிக்கும்.
கண்களை பாதிக்கும் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்... தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை title=

இன்றைய எலக்ட்ரானிக்ஸ் யுகத்தில் ஏற்பட்டுள்ள புரட்சி நமது நவீன வாழ்வை மிகவும் மேம்படுத்தியுள்ளது என்பதை மறுக்க இயலாது. செல்போன் இல்லாதவர்களைப் பார்ப்பதும் அரிது. அதே போன்று லேப்டாப், கணினி, டேப்லெட் என டிஜிட்டல் உபகரணங்கள் பல, நம் வாழ்க்கையில் இன்றியமையாத அங்கமாக மாறிப்போனது. டிஜிட்டல் யுகத்தில் நமது பணிகள் பல எளிதாகி விட்டாலும், அதனால் ஏற்படும் பாதிப்பையும் நாம் மறுக்க முடியாது. மணிக்கணக்காக, Whatsapp சேட்டிங்கிலும், Youtube வீடியோக்களை பார்ப்பதிலும், முகநூலில் நேரத்தை கழிப்பதிலும் நாம் மூழ்கி விடுகிறோம். ஒரு நாளில் பாதிக்கு மேல் எலக்ட்ரானிக்ஸ் திரையை பார்ப்பதில் நாம் பொழுதைக் கழிக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. இதனால் கண் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படும் என்கின்றனர் வல்லுநர்கள்.

பெரும்பான்மையான நேரம், கணிப்பொறி திரையை பார்ப்பதன் மூலம் கண்ணுக்கு ஓயாமல் வேலை கொடுப்பதால், கம்ப்யூட்டர் விஷன் சென்றோம் என்னும் பாதிப்பு அதிகம் உள்ளதாக கண் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். இதனை டிஜிட்டல் ஸ்ட்ரைன் (Digital Strain) எனவும் அழைப்பார்கள்.

இயற்கை ஒளியை பார்த்து பரிணாமம் அடைந்த நமது கண்கள், அதிக ஒளியை பார்க்கும்போது கூசுகின்றன. ஏதேனும் ஒரு பொருளை கூர்ந்து பார்க்கும் போது, நமது கண்ணின் மணிகள் விரிவடையும். பின்னர் மீண்டும் சுருங்கி இயல்பு நிலைக்கு திரும்பும். ஆனால் கணினி திரையை அல்லது மொபைல் போன் திரையை பார்க்கும் போது வெகு நேரம் கண்கள் விரிந்த நிலையிலேயே இருக்கும். பொதுவாக நிமிடத்திற்கு 15 முதல் 20 முறை வரை சிமிட்டும் கண்கள், கணினி திரையை பார்க்கும் போது சிமிட்டுவதில்லை. கண் சிமிட்டுதல் என்னும் அனிச்சை செயல்பாடு காரணமாக, கண்ணில் உள்ள ஈரப்பதம் சீராக பராமரிக்கப்படும். இந்த அனிச்சை செயல் பாதிக்கப்படுவதால், கண் வறட்சி ஏற்படுகிறது.

கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம், கண் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துவதால், கண்பார்வை திறன் குறைதல், கண்களில் நீர் வடிதல், எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதிலும் விளக்கை அணைத்துவிட்டு குறைவான வெளிச்சத்தில் மொபைல் திரை பார்ப்பது, கண்களை மிக அதிக அளவில் பாதிக்கும்.

அடர்ந்த இருளில் தூங்கும் போது, நமது உடலில் சுரக்கும் மெலடோனின் என்னும் ஹார்மோன், நமது மூளைக்கு புத்துணர்ச்சி அளித்து, உடலின் வளர்ச்சியை மாற்றத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. இந்நிலையில் இரவு முழுவதும் செல்போன், டிவி கணினி திரைகளை பார்ப்பதால், மெலடோனின் ஹார்மோன் உற்பத்தி பாதிக்கப்பட்டு மனநல பிரச்சனைகள் உருவாகின்றன.

மேலும் படிக்க | எச்சரிக்கை... மூளையில் ரத்த உறவை ஏற்படுத்தும்... ஆபத்தான சில பழக்கங்கள்

கண் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருக்க எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள்

1. கணினி அல்லது மொபைலை பயன்படுத்தும் போது, அறையில் போதுமான அளவு வெளிச்சம் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். அதிலும் கம்ப்யூட்டர் திரைக்கு பக்கவாட்டில் இருந்து வெளிச்சம் வரும்படி இருப்பது நல்லது.

2. கண்களை உலர்வின்றி ஈரப்பதத்துடன் பராமரிக்க, அடிக்கடி கண்களை சிமிட்டுவது நல்லது. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை, கண்களை சில வினாடிகள் தொடர்ந்து சிமிட்டி கொண்டே இருப்பதால், கண்களின் ஈரப்பதம் பாதுகாக்கப்பட்டு கண்கள் சிறிது புத்துணர்ச்சி பெறும்.

3. கணினியில் உள்ள டிஸ்ப்ளே செட்டிங்குகளை, உங்கள் சூழலில் உள்ள வெளிச்சத்தின் அளவிற்கு ஏற்றபடி, கண்களை உருத்தாத வகையில், அமைப்பது நல்லது.

4. தினமும் காலையில் எழுந்ததும், உடற்பயிற்சியைப் போலவே, கண்களுக்கும் சிறிதளவு பயிற்சி தர வேண்டும். கைகளை நேராக நீட்டி தம்சப் நிலையில், கட்டை விரலைத் தூக்கி வைத்துக்கொண்டு, கட்டை விரல் நகத்தை கண்களால் ஐந்து முறை சுழற்றிப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். முதலில் வடமிருந்து இடமாகவும், இடமிருந்து வளமாகவும் கண்களை சுழற்றி பார்ப்பது கண்களுக்கு சிறந்த பயிற்சி.

5. கண்களுக்கான 20-20-20 பயிற்சி சிறந்த பலனை கொடுக்கும். அதாவது கணினியில் வேலை செய்யும் போது, 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 வினாடிகள் இமைக்காமல் பார்க்கும் பயிற்சி. நீங்கள் பார்க்கும் பொருளை பச்சை வண்ணத்தில் தேர்ந்தெடுப்பது நல்ல பலனை கொடுக்கும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | கண்களுக்கு கீழே உருவாகும் தழும்பு... அச்சப்பட வேண்டாம் - ஈஸியாக சரி செய்யலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News