டிசம்பர் மாத சம்பளம்.. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு GOOD NEWS

Tamil Nadu Govt Employees Latest News: அகவலைப்படி நிலுவைத் தொகையுடன் சேர்த்து வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டதற்கு அரசு ஊழியர்கள்  மற்றும் ஆசிரியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 24, 2024, 04:48 PM IST
டிசம்பர் மாத சம்பளம்.. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு GOOD NEWS title=

Good News For Tamil Nadu Govt Employees: 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத சம்பளம் சார்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளது. என்ன வகையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது? எந்த வகை அரசு ஊழியர்களுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம். 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மாத சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்வதில் இருந்த குளறுபடிகள் நீங்கியதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாத சம்பள பில்லை ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை இணையதளம் (ஐஎப்எச்ஆர்எம்எஸ்) களஞ்சியம் 2.0 முகவரியில் அந்தந்த துறைகள் மூலமாக பட்டியல் தயாரித்து ஏற்றப்படும். 

2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாத சம்பளத்தை ஏற்றும்போது அந்த மாத சம்பளத்துடன் அகவலைப்படி நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கியதனால் அதற்கான வருமான வரியை பிடித்தம் செய்தார்கள்.  அதேபோல நவம்பர் மாத சம்பளத்திலும் அக்டோபர் மாதத்தில் பிடித்தம் செய்த வருமான வரித்தொகை மீண்டும் பிடித்தம் செய்தனர். வருமான வரித்துறை யில் பிடித்தம் செய்யும் பணத்தை திரும்பப் பெறுவதற்கு ஆறு மாதம் காலம் தாமதம் ஏற்படும். இதனால் அரசு ஊழியர்கள்  மற்றும் ஆசிரியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனையடுத்து டிசம்பர் மாதத்திற்கான சம்பள பட்டியலை தயாரிக்கும் அனைத்து துறை அலுவலரும் இணையதளத்தில் சம்பள பட்டியலை பதிவேற்றம் செய்த பின், சம்பளத்திற்குரிய வருமான வரியை மட்டுமே பிடித்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான டிசம்பர் மாத சம்பள பட்டியல் என்பது டிசம்பர் மாதம் 16 ஆம் தேதியிலிருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை போன்று வருமான வரியை அதிக அளவில் பிடித்தம் செய்யாமல் அவரவர் சம்பளத்திற்கான வருமான வரியை மட்டும் பிடிக்கும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்பளப் பிடித்தத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடி தற்போது நீங்கியுள்ளது என கூறப்பட்டு உள்ளது. 

அதாவது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய சம்பளத்தில், அந்த மாதத்திற்குரிய வரியை மட்டும் பிடித்தம் செய்யும் வகையில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் டிசம்பர் மாத சம்பளம் எந்த குளறுபடி இல்லாமல் வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க - Pongal Parisu | பொங்கல் சிறப்பு தொகுப்பு - ரேசன் கடைகளில் எப்போது வரை கிடைக்கும்?

மேலும் படிக்க - அரசு ஊழியர்களுக்கு ஜனவரியில் ஜாக்பாட்: அகவிலைப்படி உயர்வு எவ்வளவு தெரியுமா? முழு கணக்கீடு இதோ

மேலும் படிக்க - விரைவில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரலாம்? நிதி அமைச்சகம் கொடுத்த அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News