புதுடெல்லி: துளசி இலையில் உள்ள நீர் முடிக்கு நல்லது என்று கருதப்படுகிறது. இதன் இலைகளின் விழுது மற்றும் தண்ணீர் முடி தொடர்பான பல பிரச்சனைகளை நீக்கும். முடி உதிர்தல், பொடுகு, வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் இருந்தால் துளசி இலைகளைப் பயன்படுத்தலாம்.
உச்சந்தலையில் மசாஜ்
ஒரு பாத்திரத்தில் 3 கிளாஸ் தண்ணீர் ஊற்றி அதில் 20 முதல் 25 துளசி இலைகளை கொதிக்க வைக்கவும். அதன் சாறு தண்ணீரில் (Tulsi Water) கரைந்ததும், அதை குளிர்விக்க விடவும். ஷாம்பூவுக்குப் (Hair Shampoo) பிறகு இந்த நீரில் முடியைக் கழுவவும். இந்த தண்ணீரைக் கொண்டு உச்சந்தலையையும் மசாஜ் செய்யலாம்.
ALSO READ | தினமும் தலைமுடியை அலசுகிறீர்களா! அப்போ கண்டிப்பா இதை படிச்சி பாருங்க!
இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்
துளசியில் உள்ள மருத்துவ குணங்கள் கூந்தலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். இதன் இலைகள் மயிர்க்கால்களை மீண்டும் இயக்க உதவுகிறது, இது முடி உதிர்தல் பிரச்சனையை நீக்கும். இது தவிர, இதன் பயன்பாடு உச்சந்தலையை குளிர்ச்சியாக வைத்திருக்கும் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
எண்ணெயில் கலக்கவும்
துளசி இலைகளை எண்ணெயில் கலந்து, இந்த மூலிகை எண்ணெயைக் கொண்டு முடியை மசாஜ் செய்யவும். துளசி இலைகளை நசுக்கி, கூந்தல் எண்ணெயில் கலக்கலாம். எண்ணெயை வெயிலில் வைத்து பின்னர் தலைமுடியில் தடவவும். தலைமுடியில் சிறிது நேரம் விட்டு, ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு அலசவும்.
கறிவேப்பிலையுடன் கலக்கவும்
கறிவேப்பிலை மற்றும் துளசி இலைகளை ஹேர் பேக் செய்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். குறைந்தபட்சம் 35 நிமிடங்களுக்கு இந்த ஹேர் பேக்கை தலைமுடியில் வைத்திருங்கள், அதன் பிறகு ஷாம்பூவுடன் முடியைக் கழுவவும்.
வெள்ளை முடி பிரச்சனை நீங்கும்
உடலில் வைட்டமின் பி12 இல்லாததால், முடி நரைக்கும் பிரச்சனை ஏற்படும். ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரில் 2 ஸ்பூன் நெல்லிக்காய் மற்றும் துளசி பொடியை கலக்கவும். இரவு முழுவதும் வைக்கவும். இந்தக் கலவையை காலையில் முடியில் தடவவும். 40 நிமிடங்களுக்குப் பிறகு, ஷாம்பூவுடன் தலைமுடியைக் கழுவவும்.
ALSO READ | WALNUT: காலையில் வெறும் வயிற்றில் 2 வாதுமைக் கொட்டை செய்யும் மாயங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR