துளசியை வீட்டில் வைப்பதால் பல நன்மைகள் ஏற்படுவது போலவே துளசி டீ குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. உண்மையில், ஆன்டிவைரஸ், பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற முக்கியமான கூறுகள் துளசியில் காணப்படுகின்றன, இது பல பிரச்சனைகளில் இருந்து ஆரோக்கியத்தை காக்கும். எனவே, அதன் தேநீர் அருந்துவதும் நன்மை தரும்.
இந்த பிரச்சனைகளில் இருந்து சொல்யூஷன் கிடைக்கும்
துளசி தேநீர் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக்குவதற்கும் மிகவும் நன்மை பயக்கும். இன்றைய காலக்கட்டத்தில், தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் மக்கள் பலவிதமான செரிமான பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில், துளசி டீயை உட்கொள்வதன் மூலம், வாயு பிரச்சனை, வயிற்றுப்போக்கு பிரச்சனை, வயிற்றில் ஏற்படும் தசைப்பிடிப்பு பிரச்சனை, மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
மேலும் படிக்க | Mens Health: திருமணமான ஆண்களின் நண்பன் இந்த மாதுளை
நல்ல தூக்கத்திற்கு துளசி டீ குடியுங்கள்
நல்ல தூக்கத்திற்கு துளசி மிகவும் பயன்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் மன அழுத்தம் மற்றும் தவறான வாழ்க்கை முறை காரணமாக மக்கள் தூக்கமின்மை பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் நல்ல தூக்கத்திற்கு துளசி டீ குடிக்கலாம்.
துளசி டீ செய்வது எப்படி
தேவையான பொருட்கள்
பால் - 1 கப்
தண்ணீர் - 1.5 கப்
டீ தூள் - 2 ஸ்பூன்
துளசி இலை - 10 -15 இலைகள்
இஞ்சி - 1/2 இஞ்ச்
சர்க்கரை - தேவையான அளவு
முதலில் துளசி இலை மற்றும் இஞ்சியை நன்கு மைய இடித்துக் கொள்ளவும். டீ பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இந்த துளசி , இஞ்சி பேஸ்டை போட்டுக் கொதிக்க விடவும். பின் டீ தூளை சேர்க்கவும். அதன் ஃபிளேவர் நன்கு கொதித்து வரும்வரைக் காத்திருக்கவும். அடுத்ததாக பால் மற்றும் சர்க்கரைச் சேர்த்துக் கலக்கவும். பால் நன்கு கொதித்து கலவையில் நன்கு கலந்ததும் அடுப்பை அணைத்து வடிகட்டினால் துளசி டீ ரெடி.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | ஆரஞ்சு ஜூஸ் பிடிக்குமா, ஜாக்கிரதை: இதனால் உடல் கொழுப்பு அதிகரிக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR