எச்சரிக்கை... மூளையில் ரத்த உறைவை ஏற்படுத்தும்... ஆபத்தான சில பழக்கங்கள்

மூளையில் ரத்தம் உறைவதால், மூளையில் ரத்த ஓட்டம் தடைப்பட்டு, மூளையில் ரத்த கசிவு ஏற்படுகிறது. மேலும் மூளைக்கான ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, தமனிகளில் அழுத்தம் ஏற்படுவதால், பக்கவாதம் ஏற்படும் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 25, 2024, 12:04 PM IST
  • இரத்த நாளங்களில் ஏற்படும் உறைவு காரணமாக, பக்கவாதம் அல்லது சில சமயங்களில் மரணம் கூட ஏற்படலாம்.
  • வீட்டில் சமைத்து சாப்பிடும் பழக்கம் மெது மெதுவாக குறைந்து வருகிறது.
  • இரத்த ஓட்டத்தை தடுத்து ரத்தம் உறையும் ஆபத்தை பெருமளவு அதிகரிக்கும் சில பழக்கங்கள்.
எச்சரிக்கை... மூளையில் ரத்த உறைவை ஏற்படுத்தும்... ஆபத்தான சில பழக்கங்கள் title=

நம் உடலின் இயக்கங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் மூளையின் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் தான், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மூளையை பாதிக்கும் தீவிரமான பிரச்சனைகளில் ஒன்று, மூளையில் ஏற்படும் ரத்த உறைவு. பொதுவாகவே குளிர்காலத்தில் பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் அதிகரிக்கின்றன என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

மூளையில் ரத்தம் உறைவதால், மூளையில் ரத்த ஓட்டம் தடைப்பட்டு, மூளையில் ரத்த கசிவு ஏற்படுகிறது. மேலும் மூளைக்கான ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, தமனிகளில் அழுத்தம் ஏற்படுவதால், பக்கவாதம் ஏற்படும் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது.

இரத்த நாளங்களில் ஏற்படும் உறைவு காரணமாக, பக்கவாதம் அல்லது சில சமயங்களில் மரணம் கூட ஏற்படலாம் என்பதால், இதுகுறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்நிலையில், மூளையில் ரத்த உறைவு (Brain Health Tips) ஏற்பட காரணமாக இருக்கும், சில தவறான பழக்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்

இன்றைய நவீன காலகட்டத்தில், வீட்டில் சமைத்து சாப்பிடும் பழக்கம் மெது மெதுவாக குறைந்து வருகிறது. ரெடி டு ஈட் வகை உணவுகள், துரித உணவுகள் ஆகியவை ஆரோக்கியத்தை பெருமளவு பாதிக்கும் வகையில் உள்ளன. ஏனெனில் இவற்றில் இருப்பதெல்லாம் அதிக அளவிலான சர்க்கரை மற்றும் பிரசர்வேட்டிவ்கள். இதில் ஊட்டச்சத்துக்கள் இல்லாத கலோரி மட்டுமே உள்ளது. இந்த உணவுகளை உட்கொள்வதை வழக்கமாக கொள்வதால், இரத்தநாளங்கள் சுருங்கி இரத்த உறைவு அபாயம் பெருமளவு அதிகரிக்கிறது.

உடல் செயல்பாடு இல்லாத நிலை

டிஜிட்டல் மயமாகி உள்ள இன்றைய காலகட்டத்தில், நமது பணிகள் அனைத்தும் கணினி சார்ந்த இருக்கின்றன. ஒரே நிலையில் அமர்ந்து வேலை செய்வது ரத்த ஓட்டத்தை தடுத்து ரத்தம் உறையும் ஆபத்தை பெருமளவு அதிகரிக்கிறது. இதனை தவிர்க்க, வேலைக்கு இடையில், சிறிதளவு பிரேக் எடுத்துக்கொண்டு நடப்பது நல்லது. முடிந்த அளவு லிப்ட், எஸ்கலேட்டர் போன்றவற்றை பயன்படுத்தாமல், படிகளை பயன்படுத்துவதும் நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | Brain Health: மூளையின் ஆற்றலை சத்தமில்லாமல் காலி செய்யும்... சில ஆபத்தான பழக்கங்கள்

மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம்

மது அருந்தும் பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம், ரத்தத்தை தடிமனாக்கி, ரத்த உறைவு அபாயத்தை பெருமளவு அதிகரிக்கிறது. ஆல்கஹாலில் உள்ள ரசாயனங்கள் ரத்த நாளங்களை சேதப்படுத்துவதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். புகை பிடிக்கும் பழக்கமும் ரத்த உறைவுக்கு முக்கிய காரணமாகிறது என, ஆய்வுகள் பல நிருபித்துள்ளது.

தூக்கமின்மை

தூக்கமின்மை அல்லது போதிய அளவு தூக்கம் இல்லாத நிலை, ரத்த அழுத்தம், நீரழிவு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. இதனால் உடலில் வீக்கம், ரத்தம் தடிமனாகும் பிரச்சனை ஆகியவை அதிகரிக்கும். இதன் மூலம் மூளையில் ரத்தம் உறையும் அபாயம் பெரிதளவு அதிகரிக்கிறது.

மன அழுத்தம்

இன்றைய நவீன யுகத்தில் மன அழுத்தத்திற்கும் பதற்றத்திற்கும் பஞ்சமில்லை. இதனால் கார்டிசோலின் அளவு அதிகரிக்கலாம். கார்டிசோல் ஹார்மோன் மன அழுத்தத்தை அதிகரிக்கும் ஹார்மோன் ஆகும். இது ரத்த நாளங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி, ரத்த உறைவு ஏற்படும் சாத்தியத்தை அதிகரிக்கிறது.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | உடல்நல பிரச்சனைகளை சொல்லி அடிக்கும் கில்லி இந்த நெல்லி: தினமும் சாப்பிடுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News