சர்க்கரை நோயாளிகள் விளாம்பழத்தை சாறாக பருகலாமா? என்பது இந்த கோடைக்காலத்தில் மிகப் பெரிய ஆரோக்கிய சவாலாக எழுந்துள்ளது.
இந்த கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்குக்கும் காரணம், விளாம்பழத்தில் உள்ள இனிப்புச் சுவையும் குளுக்கோசும் நீரிழிவு நோயை அதிகப்படுத்துமோ என்பதுதான்.
கோடை காலத்தில் விளாம்பழம் மிகவும் நல்லது என்றும், தவறாமல் விளாம்பழத்தை சாப்பிடலாம் என அனைத்து நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர்.
ஆனால் எந்தப் பழமாக இருந்தாலும், சில நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும் என்பது நிபுணர்களின் எச்சரிக்கை.
அதிலும் குறிப்பாக, நீரிழிவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இனிப்பு அதிகமாக சாப்பிடுவது சரியல்ல என்பதால், சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் விளாம்பழச் சாற்றை குடிக்கலாமா வேண்டாமா என்ற சந்தேகம் எழுகிறது.
சரி விளாம்பழத்தில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது? இதை அனைவரும் பயன்படுத்தி நன்மையடைய வேண்டும் என்று பரிந்துரைப்பதற்கான காரணங்கள் என்ன?
மேலும் படிக்க | விளாம்பழத்தில் இத்தனை மகத்துவமா? தெரியாம போச்சே
பித்தம், கால்சியம் குறைபாடு, நரம்பு தளர்ச்சி என பலவிதமான நோய்களுக்கு அருமருந்தாக இருக்கும் கனி "விளாம்பழம்".
உடலில் ஏற்படும் பித்தச் சூட்டை தணிக்க விளாம்பழம் மிகச் சிறந்த பங்களிக்கிறது. விளாம்பழத்தில் உள்ல கால்சியம், பல்லுக்கும், எலும்புக்கும் மிகவும் நன்மை பயக்கும்.
கால்சியம் விட்டமின் பி12 சத்தை அதிகமாக கொண்ட விளாம் பழத்தை சாப்பிட்டால், மாதவிடாய் கோளாறுகள், அதிக உதிரபோக்கு மற்றும் வெள்ளைபடுதல் என பல பிரச்சனைகள் தீரும். அ
நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை மாற்றும் உணவுகளையும் பழங்களையும் உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் எதையும் சாப்பிடும் முன் மருத்துவர்களை அணுகுவதற்கு இதுவே காரணம். விளாம்பழம் அனைத்து நோயாளிகளுக்கும் சிறந்ததாக இருக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை.
விளாம்பழத்தில் நல்ல கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின்-சி, பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம் மற்றும் புரதம் போன்ற பல சத்துக்கள் உள்ளன.
மேலும் படிக்க | தாயின் ஆரோக்கியமே குடும்பத்தின் நிம்மதி: தாய்மார்களுக்கான சூப்பர் உணவுகள்
இவை அனைத்தும் உடலுக்கு நன்மை பயக்கும். கோடையில் இந்த ஜூஸை குடிப்பதால் பல வகையான நோய்கள் வராமல் தடுக்கிறது. வெப்பத்தால் ஏற்படும் பல நோய்களைத் தவிர்க்க விளாம்பழம் முக்கிய பங்காற்றுகிறது. வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை போன்ற பிரச்சனை உள்ளவகள் விளாம்பழத்தை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.
அதாவது, இந்த ஜூஸில் ஒன்றல்ல பல பெரிய நன்மைகள் உள்ளன. அப்போதுதான் இதை குடிப்பது நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, ஆனால் நல்லது என்பதற்காக ஒரே நாளில் அதிகமாக உட்கொண்டால், சுகாதார பிரச்சனைகள் அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும் விளாம்பழம் என்பது குறிப்பாக நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.
எனவே நீரிழிவு நோயாளிகள், மற்ற உணவுக் கட்டுப்பாடுகளையும் பின்பற்றினால் மிகவும் குறைந்த அளவில் மட்டும் விளாம்பழ ஜூஸை குடித்து பயன்பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | உங்கள் சிறுநீரகம் சுத்தமாக உள்ளதா: தெரிந்துகொண்டு சுத்தப்படுத்துவது எப்படி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR