திருமணத்திற்குப் பிறகு, ஒவ்வொரு ஆணும் தனது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இதற்காக அவரது உடலில் எந்த பலவீனமும் இல்லாமல் இருப்பது அவசியம். ஆண்கள் தந்தையாக வேண்டும் என்றால், விந்தணுக்களின் எண்ணிக்கையை சரியாக வைத்திருப்பது முக்கியம். இல்லையெனில் கருவுறுதல் பலவீனமாக இருக்கும். திருமண வாழ்க்கை கசப்பானதாக மாறிவிடும். இத்தகைய சூழ்நிலையில், ஒரு குறிப்பிட்ட பழத்தின் விதைகள் நீங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
தர்பூசணி விதைகள்
கோடைக்காலத்தில் அடிக்கடி தர்பூசணியை சாப்பிடுகிறோம். அதனால் உடலில் நீர்ச்சத்து குறையாது. இந்த பழத்தின் நன்மைகள் பற்றி நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், இதில் காணப்படும் கருப்பு விதைகளின் நன்மைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? திருமணமான ஆண்களுக்கு தர்பூசணி விதைகளால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | அதிக பாதாம் ஆபத்தாகலாம்: ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது
தர்பூசணி மற்றும் தர்பூசணி விதைகள் ஆண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஏனெனில் அவை விந்தணுக்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமில்லாமல் தரத்தையும் மேம்படுத்துகிறது. குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகளில், கணவர்கள் இந்த விதைகள் சாப்பிட முயற்சிக்க வேண்டும்.
தர்பூசணி விதைகளில் காணப்படும் சத்துக்கள்
தர்பூசணி விதைகளில் புரதம், செலினியம், துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் தாமிரம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும், இதை சாப்பிடுவதால் உடலுக்கு வைட்டமின்கள், தாதுக்கள், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் கிடைக்கின்றன.
ஆண்களுக்கான நன்மைகள்
தர்பூசணி விதைகளை சாப்பிடுவதன் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதில் சிட்ரூலின் உள்ளது, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆண்களின் இனப்பெருக்க அமைப்புக்கு அவசியமான தர்பூசணி விதைகளில் ஜிங்க் உள்ளது. இதன்மூலம் விந்தணுவின் தரம் மேம்படும். தர்பூசணி விதைகளில் இருக்கும் குளுடாமிக் அமிலம், மாங்கனீசு, லைகோபீன், லைசின் மற்றும் அர்ஜினைன் ஆகியவை ஆண்களின் பாலியல் திறனை மேம்படுத்தும். இதுதவிர, செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியமும் மேம்படும்.
எப்படி சாப்பிடலாம்?
நீங்கள் தர்பூசணி விதைகளை நேரடியாக உண்ணலாம். மேலும், விதைகளை முளைக்கட்ட விட்டு, பின்னர் வெயிலில் உலர்த்திய பின் அவற்றை உட்கொள்ளலாம். நீங்கள் இந்த விதைகளை சுவையாக செய்ய விரும்பினால், அவற்றை வறுத்த பிறகு சாப்பிடலாம்.
மேலும் படிக்க | அஜீரண பிரச்சனையை ஓட விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR