உச்சகட்டத்தை எட்டிய மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்.. இதுவரை நடந்த தேர்தல் நிலவரம்!

Maharashtra Assembly Election 2024: மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 19, 2024, 08:33 AM IST
உச்சகட்டத்தை எட்டிய மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்.. இதுவரை நடந்த தேர்தல் நிலவரம்! title=

Maharashtra Election Latest News: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் பரப்புரை இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தமுறை மகாராஷ்டிராவில் யாருக்கு வாய்ப்பு இருக்கிறது? கடந்த காலங்களில் நடந்த மகாராஷ்டிரா சட்டமன்ற மற்றும் மகாராஷ்டிரா நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தது என்பதைக் குறித்து பார்ப்போம.

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்

இந்தியாவின் பணக்காரா மாநிலம், மிகப்பெரிய வர்த்தக நகரம் அமைந்திருக்கக்கூடிய மாநிலம், இந்தியாவில் அதிக சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இரண்டாவது மாநிலம் என இப்படி மாறுபட்ட களம் கொண்டது தான் மகாராஷ்டிரா மாநிலம். இந்த மாநிலத்தோட தேர்தல் முடிவுகள் வரும் காலங்களில் மற்ற மாநிலங்களில் நடக்கக்கூடிய தேர்தல்களிலும் எதிரொளிக்கும் என்பதால், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

மகாராஷ்டிராவில் ஆட்சிதான் அமையுமா?

காங்கிரஸுக்கும், பாஜாகவுக்கும் ஆட்சியைப் பிடிக்கிறது முக்கிய நோக்கமாக இருந்தாலும், மற்ற நான்கு கட்சிகளுக்கு தங்களுடைய கட்சியையும், தொண்டர்களையும் கைப்பற்றும் மிகப்பெரிய தேர்தலாக இது பார்க்கப்படுகிறது. இந்த முறை கண்டிப்பா கூட்டணி ஆட்சிதான் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

2014 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் 

2014-லில் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது. அதுவரைக்கும் மகாராஷ்டிராவில் ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸுக்கும், தேசியவாத காங்கிரஸுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது பாஜாக. அதுமட்டுமில்லாமல் பாஜாகவும் சிவசேனாவும் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தின. 2014 மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜாக 122 இடங்களில் வெற்றி பெற்றார்கள். ஆனால் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போதைக்கு தேசியவாத காங்கிரஸ் வெளியில இருந்து ஆதரவு அளிக்கிறோம் எனக் கூறினார்கள். அதை பாஜாக ஏற்க மறுத்தது.

சிவசேனா பாஜக கூட்டணி ஆட்சி

மறுபுறம் 2014 மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் சிவசேனா 63 தொகுதிகளை கைப்பற்றி இருந்தார்கள். சிவசேனா கூட கூட்டணி அமைத்து அமைச்சரவையிலும் அவர்களுக்கு இடம் கொடுத்தது பாஜக. அதே நேரம் ஆளுங்கட்சியா இருந்த காங்கிரஸ் 42 தொகுதிகள் என சொற்ப இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதுதான் 2014 தேர்தல் நிலவரம். 

சிவசேனா மற்றும் பாஜக இடையே விரிச்சல்

அடுத்ததாக 2019 தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 2019 தேர்தலில் ஒருங்கிணைந்த சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டார்கள். மறுபுறம் காங்கிரஸும் ஒருங்கிணைந்த தேசியவாத காங்கிரசும் தேர்தலில் போட்டியிட்டார்கள். 2019 மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜாக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்கள். ஆனால் சிவசேனா மற்றும் பாஜக இடையே விரிச்சல் ஏற்பட்டது. சிவசேனாவின் உத்தவு தாக்கரே போர்க்கொடி தூக்கினார். முதலமைச்சர் பதவி எங்களுக்கு கொடுக்க வேண்டும் என நிபந்தனை வைத்ததால், கூட்டணி அரசியலில் விரிசல் விழுந்தது.

2019 மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்

இதனால் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய சிவசேனா, எதிரும் புதிருமா பரம எதிரியா இருந்த காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் கை கோர்த்து கூட்டணி அமைத்து உத்தவு தாக்கரே  தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. 2019 மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 44 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் 54  தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தது. 56 தொகுதிகளில் வெற்றி பெற்ற சிவசேனா என, இந்த மூன்று கட்சிகளும் கூட்டணி சேர்ந்து மாநிலத்தில் ஆட்சி அமைத்தனர். ஆனால் அது அதிக காலம் நீடிக்கவில்லை. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பிளவுபட்டன. 

2024 மகாராஷ்டிரா நாடாளுமன்றத் தேர்தல்

அதற்கு அடுத்தபடியாதான் மிக முக்கியமான நாட்டின் அடுத்த பிரதமர் யார்? என தீர்மானிக்கக்கூடிய 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணியை விட காங்கிரஸ் கூட்டணி அதிக அளவில் வெற்றி பெற்றார்கள். மொத்தம் 48 தொகுதிகளில் காங்கிரஸ் மட்டுமே 13 தொகுதியை கைப்பற்றினார்கள்.  ஒட்டுமொத்தமா காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 30 தொகுதிகளை கைப்பற்றியது.  பாஜக கூட்டணி 17 தொகுதிகளை மட்டும் கைப்பற்றினார்கள். 

மேலும் படிக்க - மணிப்பூர் வன்முறை: அரசுக்கு 24 மணி நேர கெடு.. அமைச்சர், எம்எல்ஏ-க்கள் வீடு சூறையாடல்

மேலும் படிக்க - மகா யுதி vs மகா விகாஸ்: மகாராஷ்டிராவில் ஆட்சி எந்த கூட்டணிக்கு? வெளியான கருத்துக்கணிப்பு!

மேலும் படிக்க - மகாராஷ்டிரா தேர்தல் 2024: இந்த முறை யாருக்கு அரியணை? முழு அட்டவணை விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News