Lungs Detox: நுரையீரலில் சேரும் நச்சுக்களை இயற்கையாக நீக்க... நீங்கள் செய்ய வேண்டியவை

Lungs Detox: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு போன்றவை காரணமாக, பெரும்பாலானோருக்கு நுரையீரல் பலவீனமாக உள்ளது. சுவாசிப்பதில் சிரமம், அடிக்கடி ஏற்படும் சளி இருமல் போன்றவை நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 19, 2024, 04:10 PM IST
  • நுரையீரலை இயற்கையாக சுத்தம் செய்ய உதவும் உணவுகளையும் பழக்கங்களையும் அறிந்து கொள்ளலாம்.
  • நுரையீரலில் சேரும் நச்சுக்கள் நுரையீரலை பலவீனப்படுத்தி விடும்.
  • சுவாசிப்பதில் சிரமம், அடிக்கடி ஏற்படும் சளி இருமல் போன்றவை நமது நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகள்.
Lungs Detox: நுரையீரலில் சேரும் நச்சுக்களை இயற்கையாக நீக்க... நீங்கள் செய்ய வேண்டியவை title=

Lungs Detox: இன்றைய மோசமான உணவு பழக்கம், வாழ்க்கை முறை மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு போன்றவை காரணமாக, பெரும்பாலானோருக்கு நுரையீரல் பலவீனமாக உள்ளது. சுவாசிப்பதில் சிரமம், அடிக்கடி ஏற்படும் சளி இருமல் போன்றவை நமது நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகள். அதிலும் தற்போது தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் AQI அளவு 500க்கு அருகில் அல்லது அதற்கு மேல் உள்ளது. இது கடுமையான மாசு இருப்பதை குறிக்கிறது.

டெல்லியில் இருப்பது, தினமும் 49 சிகரெட் பிடிப்பதற்கு சமம் என்கின்றனர் நிபுணர்கள். நமது சுவாசத்திற்கு ஆதாரமான நுரையீரலில், சேரும் நச்சுக்கள் நுரையீரலை பலவீனப்படுத்தி, சளி இருமல் போன்ற சாதாரண பாதிப்பு முதல் சுவாசப் பாதை தொற்று, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி வரை பலவித கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் இயற்கையான வழிகளை (Health Tips) அறிந்து கொள்ளலாம்.

நுரையீரலை இயற்கையாக டீடாக்ஸ் செய்யும் வழிமுறைகள் (How To Detox the Lungs Naturally) 

1. நுரையீரலை இயற்கையாகவே சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க, வெதுவெதுப்பான நீரில் கல் உப்பைக் கலந்து குடிக்கலாம்.

2. நுரையீரல் நச்சுக்களை நீக்க கொதிக்கும் நீரில் 3-4 துளி கற்பூர எண்ணெயைச் சேர்த்து, தூங்குவதற்கு முன் ஆவி எடுக்கலாம்.

மேலும் படிக்க | தினமும் வெறும் வயிற்றில் துளசி டீ... சகல வித நோய்களையும் தீர்க்கும் அருமருந்து

3. தினமும் வெறும் வயிற்றில் இஞ்சி, மஞ்சள், துளசி அல்லது பிற மூலிகைகள் சேர்த்து கொதிக்க வைத்த தேநீர் குடிக்க வேண்டும். இவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நுரையீரலில் சேர்ந்துள்ள நச்சுக்களை அகற்ற பயனுள்ளதாக இருக்கும்.

4. ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்த பழங்கள், பச்சை காய்கறிகள் போன்றவை நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்க உதவுகிறது.

5. ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

5. மீன், வால்நட் மற்றும் சியா விதைகள் போன்ற ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளும் நன்மை பயக்கும். 

6. மேலும் நிறைய தண்ணீர் குடிக்கவும். 

7. நுரையீரல் வலுவாக இருக்க, யோகா, பிராணாயாமம், மூச்சு பயிற்சிகள் போன்றவற்றை செய்வதும் முக்கியம்.

8. சர்க்கரைக்கு ஆரோக்கியமான சிறந்த மாற்றாக கருதப்படும் வெல்லம், நுரையீரலை இயற்கையாக சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டது. நுரையீரலில் சேரும் நிக்கோட்டினையும், பிற நச்சுக்களையும்,  வெளியேற்றும் திறன் பெற்றது (Lungs Detox) வெல்லம் என்பதால், சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்க்கவும்.

காற்றில் படிந்துள்ள மாசுக்கள் நமது நுரையீரலை அடைந்து அவற்றை சேதப்படுத்தி நுரையீரலில் வீக்கம் அல்லது பிற சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். மாசுக்கள் நிறைந்த பகுதிக்கு செல்லும் போது, மாஸ்க் அணிந்து செல்லுங்கள்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | Bone Health: எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக இருக்க உதவும்... சில சூப்பர் உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News