எடை இழப்புக்கு தனியா தண்ணீர்: நம்மில் பலர் உடல் பருமன் அதிகரிப்பதால் பல பிரச்சனைகளுக்கு ஆளாகிறோம். இதற்கு முக்கிய காரணம் நாம் உட்கொள்ளும் உணவுதான். எண்ணெய் மற்றும் இனிப்பு உணவுகளை அதிகமாக உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், உணவின் அளவை குறைத்தால், உடல் எடை வேகமாக குறையும் என்று நினைக்கிறோம். ஆனால், உணவை குறைப்பதால் உடல் எடை குறையாது, மாறாக நமது உடலின் ஆற்றலில்தான் பாதிப்பு ஏற்படும். இதற்கு பதிலாக சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் உடல் எடையை குறைக்கலாம். அப்படிப்பட்ட ஒரு எளிய வீட்டு வைத்தியம் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
தனியா எனப்படும் கொத்தமல்லி விதை, அனைத்து இந்திய சமையலறையிலும் காணப்படும் ஒரு மசாலா பொருளாகும். இது இல்லாமல் எந்த உணவும் முழுமையடையாது. ஒரு சிட்டிகை மல்லித்தூள் உணவில் ருசியை நிரப்புகிறது. உணவின் அடிப்படையில் இது மிகவும் முக்கியமான மூலப்பொருளாகும்.
சுவையை அதிகரிப்பது ஒரு புறமிருக்க, இதில் ஆரோக்கிய நன்மைகளும் ஏராளமாக உள்ளன. தனியாவில் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் ஆகியவை உள்ளன. இது பல நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. தனியா நீரால் நம் உடல் அரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
தனியா தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
உடல் எடையை குறைக்க உதவும்:
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முதலில் தனியா தண்ணீரை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தனியா தண்ணீர் உடல் எடையை குறைக்க சிறந்த பானமாக கருதப்படுகிறது. இது செரிமான பண்புகளைக் கொண்டுள்ளது. இது செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. தனியா நீர் வயிற்றில் வாயுப் பிரச்சனையை சரி செய்கிறது. மெட்டபாலிசத்தையும் ஒழுங்குபடுத்துகிறது, இதன் காரணமாக உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க உதவுகிறது.
மேலும் படிக்க | இரத்த வெள்ளை அணுக்களை அலர்ட் செய்யும் இஞ்சி! ஆய்வில் வெளியான தகவல்!
கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது:
தனியா விதைகள் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், உடலில் நல்ல கொழுப்பின் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. மேலும் அவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற அத்தியாவசிய வைட்டமின்களின் வளமான மூலமாக இருக்கின்றன. இவை உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:
தனியா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்க உதவுகிறது. இது நோய்வாய்ப்படும் அபாயத்தை குறைக்கிறது.
தைராய்டைக் கட்டுப்படுத்த உதவும்:
தனியாவில் உள்ள அதிக அளவு தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் தைராய்டு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் ஊறவைத்து குடித்தால் தைராய்டு கட்டுப்படும்.
உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும்:
தனியா தண்ணீரை குடிப்பது உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. சிறுநீரக பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், தினமும் தனியா தண்ணீரை குடித்தால், அது உடலில் உள்ள அனைத்து நச்சுகளையும் அகற்ற உதவும்.
தனியா தண்ணீரை இந்த வகைகளில் பயன்படுத்தலாம்:
- தனியா, சீரகம், வெந்தயம் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை இரவு முழுவதும் ஊற வைக்கவும். அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். வேண்டுமானால் வடிகட்டியும் குடிக்கலாம்.
- தனியா தண்ணீர் தயாரிக்க, அதை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாக வரும் வரை கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி குடிக்கவும்.
- ஒரு ஸ்பூன் தனியாவை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் தண்ணீரை வடிகட்டி குடிக்கவும். ஊறவைத்த விதைகளை தூக்கி எறிய வேண்டாம், பகலில் மென்று சாப்பிடலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சுகர் குறைய ஒரேடியா சுகர கைவிடனுமா? பின்னணி உண்மை என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ