Health Tips: வயது அதிகரிக்கும்போது, நம் உடலில் படிப்படியாக ஊட்டச்சத்து குறையத் தொடங்குகிறது. குறிப்பாக பெண்களின் உடலில் வைட்டமின்கள் மற்றும் பல அத்தியாவசிய தாதுக்களின் குறைபாடு ஏற்படுகின்றது. 40 வயதிற்குப் பிறகு, பெண்களுக்கு அதிக ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. இதற்கான காரணங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வயது அதிகரிப்பு ஆகிய இரண்டும் ஆகும்.
40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வைட்டமின் தேவை (Vitamin For Women Over 40 Years):
பல சமயங்களில், பெண்கள் தங்கள் இளம் வயதிலேயே தங்கள் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை குறித்து மிகவும் அலட்சிய போக்கை மேற்கொள்கிறார்கள். இதன் விளைவாக வயது அதிகரிக்கும் போது அதன் தாக்கம் அதிகமாகத் தெரிகிறது. குழந்தைகள் பிறந்ததும், உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும் பெண்களின் உடல் வலுவிழந்து, விரைவில் நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. இத்தகைய சூழ்நிலையில், 40 வயதிற்குப் பிறகு, பெண்கள் தங்கள் உணவில் அத்தியாவசிய வைட்டமின்களைப் பெற அத்தியாவசிய உணவுப் பொருட்களைச் சேர்க்க வேண்டும்.
பெண்களுக்கு முக்கியவான வைட்டமின்கள் எவை?
வைட்டமின் ஈ
வயது ஏற ஏற பெண்களின் முகத்தில் சுருக்கங்கள் வர ஆரம்பிக்கும். இதை சரி செய்ய வைட்டமின் ஈ (Vitamin E) நிறைந்த உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோல், கூந்தல் மற்றும் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும். முதுமை மற்றும் முகத்தில் புள்ளிகள், கறைகள் போன்ற பிரச்சனைகளையும் வைட்டமின் ஈ மூலம் குறைக்கலாம். இதற்கு பாதாம், வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் கீடைகள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
வைட்டமின் டி
எலும்பு தொடர்பான நோய்களும் பெண்களுக்கு வயதாகும்போது தொந்தரவு தருகின்றன. இதற்கு, வைட்டமின் டி நிறைந்த உணவு மற்றும் சப்ளிமெண்ட்ஸை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பெண்களின் உடலில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து குறைவதால், எலும்பு வலி பிரச்சனை மிகவும் அதிகமாகிறது. இதற்கு தினமும் காலையில் எழுந்து வெயிலில் அரை மணி நேரம் உட்கார்வதும், பால், பாலாடைக்கட்டி, காளான், சோயா, வெண்ணெய், கஞ்சி, மீன், முட்டை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதும் உதவும்.
வைட்டமின் சி
40 வயதிற்குப் பிறகு, பெண்களின் உடலில் பல நோய்கள் ஏற்படத் தொடங்குகின்றன. இதன் காரணமாக பெண்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. இதனால் உடல் பலவீனமாகிறது. ஆகையால் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வைட்டமின் சி (Vitamin C) நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். வைட்டமின் சி சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. எனவே, எலுமிச்சை, ஆரஞ்சு, பச்சை காய்கறிகள் மற்றும் நெல்லிக்காய் போன்றவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | ஜூஸ் ஒன்று! நன்மைகள் பல... கீல்வாதத்தைப் போக்க தினசரி வெறும் வயிற்றில் பதுவா சாறு
வைட்டமின் ஏ
பெண்களுக்கு சராசரியாக 40 முதல் 45 வயதுக்குள் மாதவிடாய் நிற்கிறது. ஆகையால் இந்த நேரத்தில் உடலில் அதிக மாற்றங்கள் நிகழ்கின்றன. ஹார்மோன் மாற்றங்கள் ஆரோக்கியத்தையும் கண்களையும் பாதிக்கின்றன. இந்த நேரத்தில், பெண்கள் கேரட், பப்பாளி, பூசணி விதைகள் மற்றும் கீரை போன்ற வைட்டமின் ஏ (Vitamin A) நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.
வைட்டமின் பி
நமது மன ஆரோக்கியத்தை பராமரிக்க வைட்டமின் பி (Vitamin B) மிகவும் முக்கியமானது. கர்ப்ப காலத்தில், குழந்தையின் மூளை வளர்ச்சிக்காக பெண்களுக்கு வைட்டமின் பி9 கொடுக்கப்படுகிறது. இதனால் குழந்தையின் மூளை சரியாக வளரும். அதேபோல், பெண்களும் வயதாகும்போது வைட்டமின் பி நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் பீன்ஸ், தானியங்கள், ஈஸ்ட் ஆகியவை அடங்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும் வேர் காய்கள்: உடனடி பலன் கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ