Health Tips: நம் உடலுக்கு அனைத்து வைட்டமின்களும் முக்கியம். ஒவ்வொரு வைட்டமினும் ஒக்வொரு விதமான நன்மையை அளிக்கின்றன. அந்த வகையில் வைட்டமின் ஏ பார்வைக்கு நல்லது, வைட்டமின் பி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதேபோல், வைட்டமின் சி, டி, ஈ மற்றும் கே ஆகியவையும் தனித்துவமான நன்மைகளை அளிக்கின்றன.
சமீப காலங்களில், மக்கள் வைட்டமின் டி இன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, உடலில் அதன் குறைபாட்டைச் சமாளிக்க இப்போது பல முறைகளைப் பின்பற்றுகிறார்கள். வலுவான எலும்புகள் (Bone Health) மற்றும் மூட்டுகளுக்கு வைட்டமின் டி மிகவும் முக்கியமானது. இந்த வைட்டமின் பலவற்றிலிருந்து நமக்கு கிடைக்கிறது, ஆனால் அதன் முக்கிய ஆதாரம் சூரிய ஒளி. போதுமான சூரிய ஒளி கிடைக்காதவர்கள் வைட்டமின் டி (Vitamin D) மாத்திரைகள் அல்லது சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள்.
ஆனால் வைட்டமின் சப்ளிமெண்டுகளை சரியான முறையில் எடுத்துக்கொள்வது முக்கியம். இல்லையெனில் பல உடல் பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். வைட்டமின் டி எடுப்பதற்கான சரியான வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். வைட்டமின் டி குறைபாடு (Vitamin D Deficiency) உள்ளவர்களுக்கு இந்தத் தகவல் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வைட்டமின் டி யாருக்கு தேவைப்படுகிறது?
உடலில் வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு, அவர்கள் உட்கொள்ளும் உணவுகளால் குறைபாடு குணமாகவில்லை என்றால், வைட்டமின் டி சப்ளிமெண்ட் (Vitamin D Supplements) கொடுக்கப்படுகிறது. சூரிய ஒளி வைட்டமின் டி இன் இயற்கையான ஆதாரமாக இருந்தாலும், அதை உங்களால் பெற முடியாவிட்டால், அதன் சப்ளிமெண்ட்ஸை சரியான வழியில் எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | மூளையின் சக்தியை காலி செய்யும் ‘சில’ ஆபத்தான பழக்கங்கள்!
வைட்டமின் டி சப்ளிமென்ண்ஸை எப்போது உட்கொள்ள வேண்டும்? (Best Time To Have Vitamin D Supplements)
வைட்டமின் டி சம்ளிமெண்டை காலையில் உட்கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ, பால், தயிர், நெய் என ஏதேனும் கொழுப்புச் சத்துள்ள பொருட்களுடன் வைட்டமின் டி எடுத்துக் கொள்ளலாம். இந்த வழியில் உட்கொண்டால், உறிஞ்சுதல் சிறப்பாக இருக்கும். நீங்கள் அதை உணவுடன், உணவுக்குப் பிறகு அல்லது இரவில் எடுத்துக் கொண்டால், அதன் உறிஞ்சுதல் குறைக்கப்படலாம். வைட்டமின் டி அளவு அதிகரித்தாலும், அதற்கு அதிக நேரம் எடுக்கும்.
எந்தெந்த பொருட்களில் இருந்து வைட்டமின் டி கிடைக்கிறது? (Foods Rich in Vitamin D)
- சூரியக் கதிர்களைத் தவிர, டுனா மற்றும் சால்மன் மீன்களை உட்கொள்வதன் மூலமும் வைட்டமின் டி நமக்கு கிடைக்கின்றது. அசைவம் சாப்பிடுபவர்களுக்கு இது ஒரு நல்ல வழியாக இருக்கும்.
- முட்டையின் வெள்ளைக்கரு, சோயா பால், தயிர், ஆரஞ்சு சாறு மற்றும் மாதுளை ஆகியவற்றிலும் வைட்டமின் டி ஏராளமாக உள்ளது.
- வைட்டமின் டி காளானிலும் நல்ல அளவில் உள்ளது.
அதிகப்படியான வைட்டமின் டியின் பக்க விளைவுகள் (Side Effects of Vitamin D Supplements)
- மருத்துவரின் ஆலோசனையின்றி வைட்டமின் டி உட்கொள்வதால் பல தீமைகள் ஏற்படக்கூடும். அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
- தேவைக்கு அதிகமாக வைட்டமின்களை உட்கொள்வது வாந்தி, பலவீனம் மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- சப்ளிமெண்டுகளை அதிகப்படியாக உட்கொண்டால் உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் அளவை அது அதிகரிக்கலாம். இதன் காரணமாக நுரையீரலில் படிகங்கள் உருவாகத் தொடங்குகின்றன.
- வைட்டமின்களின் தவறான உட்கொள்ளல் நச்சு ஹைபர்கால்சீமியாவை ஏற்படுத்தும்.
- அதன் அதிகப்படியாக உட்கொண்டால் இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கண்ட்ரோல் இல்லாம ஏறும் எடையை ஈசியா குறைக்க உதவும் சூப்பர் காலை உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ