இயற்கையான முறையில் நரை முடியை அகற்றுவது எப்படி: இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் தலைமுடி சிறு வயதிலேயே நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. அதே நேரத்தில், பலர் நரை முடியை மறைக்க பல வகையான பொருட்களையும் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதிகப்படியான ரசாயனங்களைப் பயன்படுத்துவதால், உங்கள் முடி சேதமடையத் தொடங்கிவிடும். இதனால், உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சனையும் ஏற்படலாம். இந்த பிரச்சனையால் நீங்களும் கவலைப்படுகிறீர்கள் என்றால், இனி நீங்கள் கவலைப்பட தேவையில்லை, ஏனென்றால் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடக்கூடிய சில வீட்டு வைத்திய முறையை நீங்கள் பின்பற்றலாம்.
இந்த வழிகளில் நரை முடி கருப்பாக மாற்றலாம்
கருப்பு வால்நட் -
முடியை கருமையாக்க கருப்பு வால்நட் பயன்படுகிறது. ஆம், இதைப் பயன்படுத்த, வால்நட் தோலை தூள் செய்து, இப்போது இந்த பொடியை வெந்நீரில் ஊறவைத்து, 2 மணி நேரம் கழித்து இந்த பேஸ்ட்டை உங்கள் தலைமுடியில் தடவவும். மேலும் 30 நிமிடங்களுக்குப் பிறகு சுத்தமான தண்ணீரில் முடியைக் கழுவவும். இப்படி செய்தால் வெள்ளை முடி நீங்கும்.
மேலும் படிக்க | ஓவர் எடையால் ஒரே டென்ஷனா? காலையில் இதையெல்லாம் செய்தால்... உடனே குறையும்
நெல்லிக்காய் தூள் -
நெல்லிக்காய் பொடியின் உதவியுடன் முடி வெள்ளையாவதையும் தடுக்கலாம். இதைப் பயன்படுத்த, ஒரு ஸ்பூன் நெல்லிக்காயை எடுத்து, அதில் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து சூடாக்கவும். தேங்காய் எண்ணெய் கருப்பாக மாறும் வரை கிண்டவும். இப்போது அதை ஆறவைத்து தலைமுடியில் தடவவும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தலைமுடி கருப்பாக மாற ஆரம்பிக்கும்.
எள் எண்ணெய் -
எள் எண்ணெய் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். இதை கூந்தலில் தடவினால், முடி வலுவாகவும், கருப்பாகவும் மாறத் தொடங்கும். இதைப் பயன்படுத்த, நீங்கள் ஒரு பாத்திரத்தில் எள் எண்ணெயை எடுத்துக்கவும், பின்னர் அந்த எண்ணெயைக் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தலைமுடி கருப்பாக மாற ஆரம்பிக்கும்.
மருதாணி -
மருதாணி தூள் உதவியுடன் முடி கருமையாகிறது. இதைப் பயன்படுத்த, மருதாணி தூள், காபி தூள், எலுமிச்சை சாறு மற்றும் வெந்நீர் எடுத்து, இப்போது அனைத்தையும் கலக்கவும். இப்போது இந்த கலவையை தலைமுடியில் ஒரு மணி நேரம் தடவவும்.
வெந்தயம் -
வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீர் நிரப்பிய ஒரு பாத்திரத்தில் ஊறவைத்து, அதை பேஸ்ட் செய்து, மறுநாள் காலையில் தலையில் தடவி வந்தால், சில நாட்களில் முடியின் வெண்மை நிறம் மாறத் தொடங்கும். தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வெந்தயம் அதிகம் பயன்படுகிறது. இந்த பொருளுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால், விரைவில் வெள்ளை முடி பிரச்சனை நீங்கும். இது தவிர, வெந்தயம் முடி உதிர்வதைத் தடுப்பதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
கறிவேப்பிலை -
உணவின் சுவையை அதிகரிக்க கறிவேப்பிலையை அடிக்கடி நாம் பயன்படுத்துகிறோம், ஆனால் இவை கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் இதற்கு நீங்கள் முதலில் மிக்ஸியில் கறிவேப்பிலை, நெல்லிக்காய் பொடி, நீர்ப்பிரமி தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட் தயாரானதும், தலைமுடியில் 30 நிமிடங்கள் தடவி உலர வைக்கவும். நன்கு காய்ந்தப் பிறகு இறுதியாக, முடியை சுத்தமான தண்ணீரால் கழுவவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | International Yoga Day: ஆளுமை பண்பை வளர்த்துக் கொள்ள தினமும் யோக செய்யுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ