Home Remedies For Arthritis: குளிர்காலம் பலருக்கு பிடித்தமான ஒரு காலநிலையாக உள்ளது. இந்த காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்தும் வெப்பத்திலிருந்தும் நிவாரணம் கிடைக்கின்றது. எனினும், சிலருக்கு குளிர்காலத்தில் ஏற்படும் அதிக குளிர் பிரச்சனையாக அமைகின்றது. மேலும், இந்த காலத்தில் உடலில் உள்ள உபாதைகள் மற்றும் வலிகளின் வீரியம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மூட்டு வலியை அதிகரிக்கும் குளிர் காலம்
குறிப்பாக, குளிர் காலத்தில் மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும். குளிர்ச்சியான காலநிலை மூட்டு விறைப்பு மற்றும் வலியை இன்னும் கடுமையாக்குகிறது. இக்காலத்தில் நடப்பதில் சிரமம் ஏற்படுவது மட்டுமின்றி அன்றாடப் பணிகளை செய்வதிகும் சிரமம் ஏற்படுகின்றது. குளிர் காரணமாக, இரத்த நாளங்கள் சுருங்குகின்றன. இது மூட்டுகளில் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. இதனால் வலியும் அதிகரிக்கின்றது என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
குளிர் காலத்தில் மூட்டு வலிக்கான வீட்டு வைத்தியங்கள்
எனினும், குளிர் காலத்தைக் கண்டு பீதி அடையத் தேவையில்லை. சில எளிதான மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் மூலம் குளிர்காலத்தில் மூட்டு வலியிலிருந்து விடுபடலாம். இவற்றின் மூலம் குளிர் காலத்திலும் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும். அந்த இயற்கையான வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Warm Massage: மூட்டுகளை சூடாக வைத்திருங்கள்
மூட்டுவலியைக் கட்டுப்படுத்த, மூட்டுகளை குளிர்ச்சியிலிருந்து பாதுகாப்பது மிக முக்கியமான விஷயமான பார்க்கப்படுகின்றது. குளிர்ச்சியைத் தவிர்க்க சூட்டை உண்டுபண்னும் உல்லன் ஆடைகளை அணிய வேண்டும். ஹாட் வாட்டர் பேக், அல்லது சூடான தாண்ணீர் நிரப்பிய பாட்டில் கொண்டு மூட்டுகளில் ஒத்தடம் கொடுக்கலாம். குளிர் மிக அதிகமாக உள்ள இடங்களில் வசிப்பவர்கள் ஹீட்டர் பயன்படுத்தி அறையை சூடாக வைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் மூட்டுகளில் குளிர்ச்சி இல்லாமல் இருக்கும்.
Exercise: தவறாமல் உடற்பயிற்சி செய்யவும்
குளிர் காலத்திலும் உடல் செயல்பாடுகளை பராமரிப்பது மிகவும் முக்கியம். ஸ்ட்ரெச்சிங், யோகா மற்றும் நடைப்பயிற்சி போன்ற லேசான உடற்பயிற்சிகளை செய்து மூட்டுகளின் இயக்கம் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் மூட்டு வலி குறைகின்றது. மூட்டுகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய கடினமான உடற்பயிற்சியை செய்ய வேண்டாம் என்பதை நினைவில் கொள்வது நல்லது.
மேலும் படிக்க | உடல் எடையை எளிதாக குறைக்கணுமா? உங்களுக்கு உதவும் மஞ்சள் காபி!
Diet: உணவில் கவனம் செலுத்துங்கள்
ஆரோக்கியமான உணவுமுறை குளிர்காலத்தில் மூட்டுவலியைக் குறைக்க உதவும். அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட உணவுகளான மஞ்சள், இஞ்சி, மீன் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும், வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சாப்பிடுவது எலும்புகளை பலப்படுத்துகிறது.
Mental Tension: மன அழுத்தத்தைக் குறைக்கவும்
மன அழுத்தம் மூட்டுவலி இன்னும் திவிரமாக்கும் என கூறப்படுகின்றது. தியானம் மற்றும் மனதை தளர்த்திக்கொள்ளும் நுட்பங்களைப் பின்பற்றி மன அமைதியைப் பேணவும். மேலும், போதுமான தூக்கமும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
Joint Pain: நிபுணர் கருத்து
மூட்டுவலி நோயாளிகள் குளிர்காலத்தில் தங்கள் வாழ்க்கை முறையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். வழக்கமான பரிசோதனைகள் மற்றும் முறையான சிகிச்சை மூலம் இந்தப் பிரச்சனையைக் கட்டுப்படுத்தலாம். இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால், குளிர்காலத்தில் மூட்டுவலியை பெருமளவு கட்டுப்படுத்தலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ