ஈரோடு இடைதேர்த்தலில் பாஜக போட்டி இல்லை! காரணம் இதுதான்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், பாஜக போட்டியிடவில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - RK Spark | Last Updated : Jan 12, 2025, 05:38 PM IST
  • ஈரோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்.
  • பாஜக போட்டியில்லை என்று அறிவிப்பு.
  • திமுக vs நாதக இடையே நேரடி போட்டி.
ஈரோடு இடைதேர்த்தலில் பாஜக போட்டி இல்லை! காரணம் இதுதான்! title=

காங்கிரஸ் எம்எல்ஏவும், கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதனுடன் ஈரோடு இடைத்தேர்தலையும் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். அதில் ஈரோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மூன்று நாட்கள் கழித்து பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது.

மேலும் படிக்க | Pongal 2025: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை - அரசின் கடைசி நேர அப்டேட்

பாஜக போட்டியில்லை

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தலில் போட்டியில்லை என்பதை மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம். கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
 
சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் நமக்கு வழங்கிய அரசியல் சாசன சட்டத்திற்கு நேர் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள், இது திராவிட மாடல் இல்லை, Disaster மாடல் என்று உரக்கச் சொல்லத் துவங்கிவிட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, நடைபெறவிருப்பது, இடைத் தேர்தலுக்கான இடைத் தேர்தல். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலின்போது, பொதுமக்களைப் பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தோம். ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில், திமுக, தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம்.
 
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், திமுகவை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே, தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க திமுகவை அனுமதிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை. மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்தாலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவை அகற்றி, மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு" என்று தெரிவித்துள்ளனர்.

திமுக vs நாதக போட்டி

முன்னதாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக நிச்சயம் போட்டியிடும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். இந்த நிலையில் பாஜக தேர்தலில் இருந்து பின்வாங்கியுள்ளது. மேலும் அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளும் இடைத்தேர்தலை புறக்கணித்ததால் திமுக மற்றும் நாம் தமிழர் இடையே நேரடி போட்டி உருவாகி உள்ளது.

மேலும் படிக்க | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம் போட்ட முக்கிய கண்டிஷன்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News