இந்தியாவின் மிக நீண்ட ரயில் பயணம்: இந்திய ரயில்வேயின் ரயில்களில் தினமும் 2 கோடிக்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர் என தரவுகள் கூறுகின்றன. நாடு முழுவதும் தினமும் 12000க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சில குறுகிய தூர ரயில்கள் மற்றும் சில நீண்ட தூர ரயில்கள். அந்த வகையில் இன்று இந்தியாவின் மிக நீண்ட ரயில் சேவை குறித்து அறிந்து கொள்ளலாம்.
நாட்டின் மிக நீண்ட தூர ரயில்
இந்திய ரயில்வே இயக்கும் ஒரு ரயில், 9 மாநிலங்கள் வழியாக பயணித்து, 4234 கி.மீ. தூரத்தை கடக்கிறது . நாட்டின் மிக நீண்ட தூர ரயிலான இது தனது பயணத்தை முடிக்க மூன்று நாட்களுக்கு மேல் எடுத்துக் கொள்கிறது. இந்திய ரயில்வேயின் வந்தே பாரத், ராஜ்தானி, சதாப்தி போன்ற பிரபலமான ரயில்களில் ஒன்றான விவேக் எக்ஸ்பிரஸ் என்ற ரயிலை பற்றி அறிந்து கொள்ளலாம். நாட்டிலேயே அதிக தூரத்தை கடக்கும் இந்த ரயில், சதாப்தியோ, ராஜ்தானியோ, வந்தே பாரதோ அல்ல. ஆனால் இது ஒரு அதிவிரைவு ரயில். இது நாட்டின் 9 மாநிலங்கள் வழியாகப் பயணிக்கிறது.
9 மாநிலங்களை கடந்த ரயில் பயணம்
நாட்டிலேயே அதிக தூரம் ஓடும் இந்த ரயில், அசாம், நாகாலாந்து, பீகார், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்கள் வழியாக இலக்கை அடைகிறது. திப்ருகர்- கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் 2011-12 ரயில்வே பட்ஜெட்டில் தொடங்கப்பட்டது. இது சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாளில் தொடங்கப்பட்டது. இந்த ரயில் அசாமின் திப்ருகரில் இருந்து தமிழ்நாட்டின் கன்னியாகுமரி வரை இயக்கப்படுகிறது.
4234 கிமீ பயணம்
நாட்டின் மிக நீண்ட தூரம் ஓடும் ரயில் எண் 22504/22503 விவேக் எக்ஸ்பிரஸ் ஆகும். 4234 கி.மீ. தூரம் என்பது, டெல்லியிலிருந்து சிங்கப்பூர் வரை உள்ள தூரத்திற்கு கிட்டத்தட்ட சமம். விமானம் மூலம் டெல்லியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் தூரம் 4155 கிமீ / 2582 மைல்கள்.
விவேக் எக்ஸ்பிரஸ் செல்லும் பாதை
நீண்ட தூர ரயிலான இதற்கு அதிக நிறுத்தங்கள் உள்ளன. பயணத்தின் போது இந்த ரயில் 59 நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில் தனது பயணத்தை முடிக்க 75 மணி நேரம் ஆகும். அதாவது ரயில் பயணம் தொடங்கிய நான்காவது நாளில் இலக்கை அடைகிறது.
விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேர விபரம்
மிக நீண்ட தூரத்தை கடக்கும் இந்த ரயில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இயங்கும். திப்ருகாரில் இருந்து இரவு 7.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 75 மணி நேரம் தண்டவாளத்தில் ஓடி நான்காம் நாள் மதியம் 22.00 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடைகிறது.
ரயில் கட்டண விபரம்
நாட்டில் நீண்ட தூரம் பயணிக்கும் இந்த ரயில், இலக்கை அடைய 4 நாட்கள் ஆகும். மொத்தம் 22 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் திப்ருகர் மற்றும் கன்னியாகுமரி இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் ஏசி 2-க்கான கட்டணம் ரூ.4,450. ஏசி 3 கட்டணம் ரூ.3,015 ஆகவும், ஸ்லீப்பர் கட்டணம் ரூ.1,185 ஆகவும் உள்ளது. இருப்பினும், டைனமிக் கட்டண முறையின் காரணமாக ரயில் கட்டணம் மேலும் அதிகரிக்கும்.
மேலும் படிக்க | Pongal 2025: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை - அரசின் கடைசி நேர அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ