இரவு உணவிற்குப் பின் செய்யும் இந்தத் தவறுகளால் உடல் எடை அதிகரிக்கும்

Belly Fat Loss: உடல் எடையை குறைப்பதற்காக பலரும் முயற்சி செய்துக் கொண்டு இருக்கும் நிலையில், இரவு உணவிற்குப் பிறகு செய்யும் சில தவறுகள் உடல் எடையை பாதிக்கும் என்பது தெரியுமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 1, 2023, 11:05 PM IST
  • உடல் எடை அதிகரிப்பு காரணங்கள்
  • ஒல்லியாக செய்யும் முயற்சிகள் பூமாரங் ஆகுமா?
  • இரவு உணவும் உடல் எடையும்
இரவு உணவிற்குப் பின் செய்யும் இந்தத் தவறுகளால் உடல் எடை அதிகரிக்கும் title=

உடல் எடையை குறைப்பதற்காக பலரும் முயற்சி செய்துக் கொண்டு இருக்கும் நிலையில், இரவு உணவிற்குப் பிறகு செய்யும் சில தவறுகள் உடல் எடையை பாதிக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை. நம்மில் பெரும்பாலோர், நமது எடையை பராமரிக்கவும், ஆரோக்கியமான உடலமைப்பைப் பெறவும், சீரான உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்தல் மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்வது உள்ளிட்ட ஆரோக்கியமான வழக்கத்தை பின்பற்ற முயற்சிக்கிறோம்.

ஆனால் எப்போதாவது, ஆரோக்கியமான உடல் எடை குறைக்கும் பயிற்சிகளைக் கடைப்பிடித்தாலும், நாம் நமது இலக்கை ஏன் அடைவதில்லை. அதற்கு நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் தான் காரணமாகிறது என்று எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா?  
 
உடல் எடை குறைப்பு தவறு
உணவுத் தேர்வுகள் மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையை குறைக்க விரும்பினாலும், உணவுக்குப் பிந்தைய சரியான பழக்கங்களைப் பின்பற்றுவது பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சாப்பிட்ட பிறகு நாம் செய்யும் காரியங்களும் எடை நிர்வாகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் காரணங்களில் இரவு உணவிற்குப் பின் பொதுவாக பலரும் செய்யும் 5 தவறுகளை பட்டியலிட்டுள்ளோம். இந்தத் தவறுகளை நீங்களும் செய்கின்றீர்களா?

மேலும் படிக்க | தொள தொள தொப்பை குறையணுமா? அப்போ இந்த யோகாசனம் போதும்
 
இரவு உணவுக்குப் பிறகு காபி குடிப்பது
நம்மில் சிலருக்கு இரவு உணவு முடிந்த உடனேயே காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் இந்த ஒரு பழக்கம் உங்கள் தோற்றத்தையும் உங்கள் எடையையும் மாற்றும் என்பது உங்களுக்குத் தெரியுமா? காபியில் உள்ள காஃபின் உங்கள் தூக்கத்தை சீர்குலைக்கும், இது உங்கள் எடை மற்றும் ஆரோக்கியத்தை மேலும் பாதிக்கும்.

இரவு உணவிற்குப் பிறகு உடனே உறங்குவது  
இரவு உணவை முடித்துவிட்டு உடனடியாக படுக்கைக்குச் செல்வது உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தவிர்க்க வேண்டிய மற்றொரு ஆரோக்கியமற்ற பழக்கமாகும். இரவு உணவு சாப்பிட்ட உடனேயே தூங்கச் சென்றால், உண்ணும் உணவை ஜீரணிக்க உங்கள் உடலுக்கு போதுமான நேரம் கிடைக்காது, இது உங்கள் எடையை அதிகரிக்கச் செய்யும்.

இரவு உணவுக்குப் பிறகு கிரீன் டீ குடிப்பது
க்ரீன் டீ குடிப்பது ஆரோக்கியமானது என்றாலும், இரவு உணவு உண்டவுடன் அதைச் செய்வது சரியா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதில் ஆகும். இரவு உணவிற்குப் பிறகு கிரீன் டீ குடித்தால், உங்கள் உடல் பாதிக்கப்படும், ஏனெனில், செரிமான அமைப்பு முக்கிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை கிரீன் டீ தடுக்கிறது.

இரவு உணவுக்குப் பிறகு தண்ணீர் குடிப்பது
தண்ணீர் குடிப்பது ஒரு கெட்ட பழக்கம் அல்ல, ஆனால் இரவு உணவிற்குப் பிறகு தண்ணீர் குடிப்பது உங்கள் உடலுக்கு ஆபத்தானது. உணவுக்கு இடையிலும், உணவு உண்ட பின்பும் குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் குடிப்பதால், இரைப்பைச் சாறுகள் மற்றும் செரிமான நொதிகள் நீர்த்துப்போய்விடும். எனவே, செரிமானச் செயல்பாட்டில் இடையூறுகள் ஏற்படும். இரவு உணவிற்குப் பிறகு 30 நிமிடங்கள் கழித்தே நீர் பருக வேண்டும்.  

மேலும் படிக்க | ஆச்சரியம் ஆனால் உண்மை! சதை உண்ணும் பாக்டீரியாவிலிருந்து தப்பிய உலகின் முதல் பெண்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News