ஸ்பெயினில் சேவிலே அருகே தாஸ் ஹெர்மனாஸ் என்ற நகரத்தை சேர்ந்தவர் ரோசியோ கார்டெஸ் நுனெஷ். இவருக்கு வயது 25. இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த இவரை கேவிலே நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமத்திருந்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.
அதைத் தொடர்ந்து அவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து வார்டுக்கு லிப்ட் மூலம் கொண்டு சென்ற போது லிப்டுக்குள் நுழையும்போது எதிர்பாராத விதமாக அது செயல்பட தொடங்கியதால் அந்த நேரம் ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்த ரோசியோவின் தலையை லிப்ட் கதவு நசுக்கியது.
இதனால் அவர் தலை வேறு, உடல் வேறு என இரு துண்டுகளாகி பரிதாபமாக இறந்தார்.