World Kidney Day: ஆண்டுதோறும் லட்சக்கணக்கான உயிரிழப்புகள்... ஏன் சிறுநீரகம் மிக மிக முக்கியம்?

World Kidney Day 2023: உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சிறுநீரகம் சார்ந்த நோய்களுக்கு பல லட்சக்கணக்கானோர் உயிரிழக்கும் நிலையில், அதுசார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 9, 2023, 10:38 AM IST
  • இந்த தினம் 2006ஆம் ஆண்டில் இருந்து அனுசரிக்கப்படுகிறது.
  • நாள்பட்ட சிறுநீரக நோய் குறித்து தீவிர விழிப்புணர்வு.
  • உலக சிறுநீரக தினம் பல நோக்கங்களைக் கொண்டுள்ளது.
World Kidney Day: ஆண்டுதோறும் லட்சக்கணக்கான உயிரிழப்புகள்... ஏன் சிறுநீரகம் மிக மிக முக்கியம்? title=

World Kidney Day 2023: உடல் ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வுக்காக, ஆண்டுதோறும் மார்ச் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது நெப்ராலஜி சர்வதேச சங்கம் (ISN- International Society of Nephrology) மற்றும் சிறுநீரகம் அறக்கட்டளையின் சர்வதேச கூட்டமைப்பு - உலக சிறுநீரக கூட்டணி ஆகியோரின் கூட்டு முயற்சியில் கடைபிடிக்கப்படுகிறது. 

2006ஆம் ஆண்டில் இருந்து உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், அதன் அடிப்படையே சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான். அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருவின்கீழ், உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படும். அதில், இந்தாண்டுக்கான கரு,"அனைவருக்குமான சிறுநீரக ஆரோக்கியம் - எதிர்பாராதவற்றுக்குத் தயாராவது, பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஆதரவளிப்பது" என்ற தேர்ந்தெடுத்துள்ளனர். 

வரலாறு 

"உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா?" என்ற கருப்பொருளில் முதல் உலக சிறுநீரக தினம் கொண்டாடப்பட்டது. அன்றிலிருந்து, நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD), நீரிழிவு நோயின் தாக்கம், ரத்த அழுத்தம் மற்றும் இந்த உறுப்புகளில் ஏற்படும் பிற சுகாதார நிலைமைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் சிறுநீரக ஆரோக்கியம் போன்ற கருவையும் உள்ளடக்கி இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. சமீப காலங்களில், சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் கண்டறிதல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படுகிறது. 

நோக்கங்கள் 

உலக சிறுநீரக தினம் பல நோக்கங்களைக் கொண்டுள்ளது. இது முதன்மையாக சிறுநீரகங்களின் முக்கியத்துவம் மற்றும் உடலில் அவற்றின் குறிப்பிடத்தக்க செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

மேலும் படிக்க | உடல் எடை குறையணுமா? இதை மறந்து கூட சாப்பிடாதீங்க, கவனம்!!

மற்றொரு குறிக்கோள், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்துடன் நாள்பட்ட சிறுநீரக நோய் வலுவாக தொடர்புடையது என்பதை முன்னிலைப்படுத்துவதாகும். இந்த பிரச்சாரமானது நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ள அனைத்து நோயாளிகளுக்கும் முறையான பரிசோதனையை ஊக்குவிக்கிறது. 

நாள்பட்ட சிறுநீரக நோயின் ஆபத்தைக் கண்டறிந்து, அதன் தாக்கத்தை குறைப்பதில் மருத்துவ நிபுணர்களின் முக்கியப் பங்கை வலியுறுத்துவது இதன் மற்றுமொரு நோக்கமாகும். மேலும், உலக சிறுநீரக தினம், நாள்பட்ட சிறுநீரக தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உள்ளூர் மற்றும் தேசிய சுகாதார அதிகாரிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. சிறுநீரக பரிசோதனையில் முதலீடு செய்ய அரசுகளை ஊக்குவிக்கிறது.

முக்கியத்துவம் 

சிறுநீரகங்கள் என்பது வயிற்றில் அமைந்துள்ள இரண்டு அவரை விதை வடிவ (Bean-Shaped) உறுப்புகளாகும். அவை உடலில் இருந்து கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவங்களை அகற்றுதல், ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துதல், ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்தல் மற்றும் உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சிறுநீரக நோய் உலகளவில் ஒரு முக்கிய சுகாதார பிரச்சினை. இது ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்துகிறது. உலக சிறுநீரக தினம் என்பது சிறுநீரக நோயின் உலகளாவிய சுமைக்கு கவனத்தை ஈர்க்கும் ஒரு தளமாகும். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சிறுநீரக செயலிழப்பு போன்ற சிக்கல்களைத் தடுக்க சிறுநீரக நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பதை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.

சுகாதார பரிசோதனைகள், கல்வித் திட்டங்கள் மற்றும் நிதி திரட்டும் நிகழ்வுகள் போன்ற பல்வேறு செயல்பாடுகளால் இந்த தினம் குறிக்கப்படுகிறது. சுகாதார வல்லுநர்கள், நோயாளி குழுக்கள் மற்றும் தனிநபர்கள் ஒன்றிணைந்து சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சிறுநீரக நோயைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க இது ஒரு வாய்ப்பாகும்.

மேலும் படிக்க | Brain Booster Foods: உடலாரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் பராமரிக்கும் உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News